துபாய், செப். 27. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி 22 ரன்கள் குவித்தும் அந்த இலக்கை இலங்கையும் எட்டி போட்டி சமநிலையில் முடிவடைந்தது. ஆடுகளம் ரன்குவிப்புக்கு சாதகமாக இருந்த நிலையில், இந்திய அணி சூப்பர் ஓவரில் ஆர்ஸ்தீப் சிங்கை பயன்படுத்தியது. ஆனால் ஆர்ஸ்தீப் தன்னுடைய அறிவை பயன்படுத்தி Wide யாக்கர் பந்துகளை தொடர்ந்து வீசி இலங்கைக்கு வெறும் இரண்டு ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதனால் இந்திய அணி சூப்பர் ஓவரில் முதல் பந்தலே வெற்றி இலக்கை எட்டியது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஆர்ஸ்தீப் சிங்கை இந்தியாவின் சிறந்த t20 பவுலர் என்று பாராட்டியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், நான் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கியதில் இருந்து சொல்கின்றேன். இந்திய டி20 அணியில் ஆர்ஸ்தீப் சிங் கண்டிப்பாக இடம்பெற வேண்டும். தற்போது சூப்பர் ஓவரில் அவர் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் என்னுடைய கருத்தை அவர் நிரூபித்துக் காட்டி இருக்கின்றார். இலங்கைக்கு எதிராக மிகவும் சிறப்பான ஒரு பந்துவீச்சை அவர் செயல்பட்டு இருக்கிறார். சூப்பர் ஓவரில் அவர் வீசிய விதம் ஏன் டி20 அணியில் தான் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பதை அவர் தனது பந்து வீச்சு மூலம் காட்டிவிட்டார்.
இந்த போட்டியில் பும்ரா இல்லை. எனினும் அவர் இல்லாத நிலையில் தன்னுடைய திறமையை காண்பித்து இந்தியாவின் மிகச்சிறந்த டி20 பவுலர் என்று பெயரை மீண்டும் நிரூபித்துள்ளார். ஆம் இந்த விஷயத்தில் நான் தைரியமாக சொல்வேன். அவர்தான் டி20 கிரிக்கெட்டில் சிறந்த பவுலர்.இந்த பெயரை அவர் மீண்டும் எடுத்திருக்கிறார். ஹர்சித் ராணா வெறும் சில போட்டிகள் மட்டுமே விளையாடி இருக்கிறார். எப்போதாவது வாய்ப்பு கிடைக்கும் போது பந்துவீசி திறமையை வெளிப்படுத்துவது என்பது மிகவும் கடினமான விஷயம். இது தன்னுடைய உத்வேகத்தை நிச்சயம் பாதிக்கும். ஆனால் இன்று ஹர்ஷித் செய்த தவறு மிகவும் குழந்தைத்தனமானவை. ஒவ்வொரு வேகமான பந்துக்கும் அடுத்தது பந்தில் வேகத்தை குறைத்து வீசுகிறார். இது மிகவும் குழந்தைத்தனமாக இருந்தது. இதுபோல ஒரு தவறை அவர் ஏற்கனவே செய்திருக்கிறார். அதனை இலங்கை சிறப்பாக கண்டறிந்து விளையாடி இருக்கிறது. இந்த தவறிலிருந்து அவர் பாடம் கற்றுக் கொள்வார் என நம்புகிறேன் என அஸ்வின் கூறியுள்ளார்

















