சுதேசி பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும்: மோடி அறிவுரை

புதுடெல்லி, செப். 29– வரும் பண்​டிகை காலத்​தில் சுதேசி பொருட்​களை மட்​டுமே வாங்க வேண்​டும் என்று பிரதமர் மோடி அறி​வுறுத்தி உள்ளார். 126-வது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்​பானது. இதில் பிரதமர் நரேந்​திர மோடி பேசி​ய​தாவது: தீபாவளிக்கு பிறகு சத் பண்​டிகை கொண்​டாடப்பட உள்​ளது. மத்​திய அரசின் முயற்சி​யால் கொல்​கத்​தா​வின் துர்கா பூஜை யுனெஸ்​கோ​வின் கலாச்​சார பட்​டியலில் சேர்க்​கப்​பட்​டது. இதே​போல சத் பூஜையையும் யுனெஸ்கோ பட்​டியலில் சேர்க்க முயற்சி மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது.அக்​டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்​தியை கொண்​டாட உள்​ளோம். நமது தேசத்​தந்தை சுதேசி கொள்​கையை வலி​யுறுத்​தி​னார். அவற்​றில் காதி மிக​வும் முக்​கிய​மானது. ஆனால் துர​திர்​ஷ்ட​வச​மாக, சுதந்​திரத்​துக்​குப் பிறகு காதி மீதான ஆர்​வம் குறைந்​தது. மத்​திய அரசின் முயற்​சிகளால் கடந்த 11 ஆண்​டு​களாக காதி பொருட்​களின் விற்​பனை அதி​கரித்து வரு​கிறது. வரும் காந்தி ஜெயந்தி நாளில் குறைந்​த​பட்​சம் ஒரு காதி பொருளை வாங்க வேண்​டு​கிறேன்.
இதற்கு தமிழ்​நாட்டை சேர்ந்த யாழ் நேச்​சுரல்ஸ் ஓர் உதா​ரணம் ஆகும். அந்த நிறுவன உரிமை​யாளர்​கள் அசோக் ஜெகதீசன், பிரேம் செல்​வ​ராஜ் ஆகியோர் கார்ப்​பரேட் வேலையை துறந்து புதிய முயற்​சியை மேற்​கொண்​டனர். புற்​கள் மற்​றும் வாழை நார்​களி​லிருந்து யோகா பாய்​களை அவர்​கள் உரு​வாக்​கினர். மூலிகை சாயங்​களால் துணி​களுக்கு சாயம் பூசினர். இந்த புதிய முயற்சி மூலம் சுமார் 200 குடும்​பங்​களுக்கு அவர்​கள் வேலை​வாய்ப்பை வழங்கி உள்​ளனர். ஆர்​எஸ்​எஸ் அமைப்​புக்கு புகழாரம்: அடுத்த சில நாட்​களில் விஜயதசமியை கொண்​டாட உள்​ளோம். இந்த நாளில் ஆர்​எஸ்​எஸ் அமைப்பு 100-வது ஆண்டு விழாவை கொண்​டாடு​கிறது. பல நூற்​றாண்​டு​களாக இந்​தியா அடிமைத்​தனத்​தில் சிக்​கித் தவித்​தது. இந்த சூழலில் டாக்​டர் ஹெட்​கேவர் கடந்த 1925-ம் ஆண்டு விஜயதசமி நாளில் ராஷ்ட்​ரிய சுயம்​சேவக் சங்​கத்தை நிறு​வி​னார். அவரது மறைவுக்கு பிறகு பரம் பூஜ்ய குருஜி தேசத்​துக்கு சேவை செய்​யும் மகத்​தான பணியை முன்​னெடுத்து சென்​றார். கடந்த 100 ஆண்​டு​களாக ஆர்​எஸ்​எஸ் அமைப்பு இடை​வி​டா​மல் தேச சேவை​யில் ஈடு​பட்டு வரு​கிறது. ஆர்​எஸ்​எஸ் அமைப்​புக்​கும் அதன் தொண்​டர்​களுக்​கும் வாழ்த்​துகளைத் தெரி​வித்​துக் கொள்​கிறேன். வரும் பண்​டிகை காலத்​தில் சுதேசி பொருட்​களை மட்​டுமே வாங்க வேண்​டும். உள்​நாட்​டில் உற்​பத்தி செய்​யப்​படும் பொருட்​களை மட்​டுமே வாங்​கு​வேன் என்று ஒவ்​வொரு இந்​தி​யரும் உறு​தி​யேற்க வேண்​டும். நமது பாதை சுதேசி பாதை​யாக இருக்க வேண்​டும். அனைத்து துறை​களி​லும் நாம் சுய​சார்பை எட்ட வேண்​டும். பண்​டிகை நாளில் நமது வீடு​களை சுத்​தம் செய்​கிறோம். அதே​நேரம் நமது தெருக்​கள், சுற்​றுப்​புறங்​கள், சந்​தைகள், கிராமங்​கள், நகரங்​களை​யும் சுத்​தம் செய்​ய வேண்​டும்​. இது நமது தலை​யாய கடமை ஆகும்​. இவ்​வாறு பிரதமர் மோடி பேசி​னார்​.