காங்கிரஸ் எம்எல்ஏ வீட்டில்லோக் ஆயுக்தா அதிரடி சோதனை

சிக்கமகளூர்: செப். 30-
கர்நாடக மாநிலத்தில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் காங்கிரஸ் எம்.எல்.ஏ டி.டி. ராஜேகவுடாவின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். சட்ட விரோதமாக அவர் சொத்து சேர்த்து வைத்துள்ள புகாரி பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் லோக் ஆயுக்தாவில் ராஜேகவுடா மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, லோக் ஆயுக்தா அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
சிருங்கேரி சட்டமன்றத் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜேகவுடா, அவரது மனைவி புஷ்பா மற்றும் மகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டி.டி. ராஜேகவுடா இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் அவர் தனது சொத்துக்களை அறிவிக்கவில்லை என்று புகார் அளிக்கப்பட்டது.
பாஜக தலைவர் தினேஷ் இது தொடர்பாகமக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் விண்ணப்பம் தாக்கல் செய்திருந்தார். மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் சிக்கமகளூர் லோக் ஆயுக்தா அலுவலகத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட உடனேயே சிக்கமகளூர் லோக் ஆயுக்தா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பசாபுராவில் உள்ள ராஜகவுடா வீட்டில் லோக்ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். என்னால் கர்நாடக அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.