தனுஷ்கோடியில் கடல் அரிப்பால் 60 ஆண்டுகளுக்கு பின் நடந்த ஆச்சரியம்

ராமேஸ்வரம்: அக்.6-
உலக புகழ் பெற்ற ஆன்மீக சுற்றுலா தலமான ராமேஸ்வரத்திற்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் பக்தர்கள் வருகிறார்கள். அதேபோல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்பட தென்மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வருகிறார்கள். இதேபோல் ஆயிரக்கணக்கான வடமாநிலத்தவரும் தினமும் வருகிறார்கள்.
அப்படி வரும் பலரும் தனுஷ்கோடி செல்வது உண்டு. இந்நிலையில் தனுஷ்கோடியில் கடல் அரிப்பால் 60 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய தரைப்பாலம் வெளியே தெரிந்தது. இதனை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர். ஒரு காலத்தில் தனுஷ்கோடி என்பது ராமேஸ்வரத்தை விடவும் புகழ் பெற்ற நகரமாக இருந்தது. இப்போது உள்ள ரயில் பாதையே தனுஷ்கோடிக்காக போடப்பட்டது தான். இலங்கைக்கு கூப்பிடும் தூரத்தில் உள்ள தனுஷ்கோடியில் 1964 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு இரவில் நடந்த சம்பவம் அந்த நகரத்தை மோசமாக அழித்தது. தனுஷ்கோடியைத் தாக்கிய மிகக் கோரமான புயல் என்று கூறுவதைவிட சுனாமி என்று சொல்லாம்.
1964ம் ஆண்டு ராட்சத அலை 1964ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி வங்காள விரிகுடாவில் உருவான சூறாவளிப் புயல், சுமார் 280 கி.மீ. வேகத்தில் வந்தது. இதனால் காற்றோடு ராமேஸ்வரம் தீவின் கிழக்கு முனையில் அமைந்துள்ள தனுஷ்கோடியை கடுமையாக தாக்கியது. இவ்வளவு மோசமான புயலின் தாக்கத்தினால், சுனாமி போன்ற 40 முதல் 50 அடி உயரத்திற்கு (சுமார் 7 மீட்டர்) கொண்ட ராட்சத கடல் அலைகள் தனுஷ்கோடி நகரத்திற்குள் புகுந்தன. ஒரே நாளில் காலியான தனுஷ்கோடி இந்த ஆழிப்பேரலையும், சூறாவளிக் காற்றும் இணைந்து அன்றைய இரவு உறங்கிக் கொண்டிருந்த தனுஷ்கோடி மக்களை மொத்ததமாக கடலுக்குள் மூழ்கடித்து கொன்றது..
தனுஷ்கோடியில் இருந்த ரயில் நிலையம், துறைமுகம், தேவாலயங்கள், பள்ளிக்கூடங்கள், தபால் நிலையங்கள் என அனைத்தும் ஒரு நாள் இரவில் காலியாகின.