தொகுதி பங்கீட்டையே முடிக்கல! பீகாரில் காங்., பாஜக கூட்டணியில் குழப்பம்

பாட்னா: அக்டோபர் 9-
நவ.6 மற்றும் 11ம் தேதிகளில் பீகாரில் இரண்டு கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இன்னமும் பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படவில்லை. இதனால் இரண்டு கூட்டணி தலைமையும் கடும் அப்செட்டில் இருக்கிறது. பீகார் மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவ.22ம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே அதற்கு முன்னதாக தேர்தல் நடத்த உத்தரவிடப்பட்டிருக்கிறது. இம்மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆட்சியில் இருக்கிறது.
முதலமைச்சராக கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் உள்ளார். இக்கட்சி தேசிய அளவில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இருக்கிறது. இம்மாநிலத்தில் மும்முனை போட்டி இருக்கிறதுஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான என்டிஏ கூட்டணி 2. ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான மகாபந்தன் கூட்டணி 3. பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி பாஜக கூட்டணியின் நிலைமை இதில் என்டிஏ கூட்டணியில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் (நிதிஷ்குமாரின் கட்சி), லோக் ஜனசக்தி கட்சி (ராம்விலாஸ்), மதச்சார்பற்ற ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா என மொத்தம் 5 கட்சிகள் இருக்கின்றன. இந்த 5 கட்சிகளில் 3 கட்சிகள் கடந்த முறையும் என்டிஏ கூட்டணியில் இருந்தன. இதில் பாஜக 110 தொகுதிகளில் போட்டியிட்டு 74 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 115 தொகுதிகளில் போட்டியிட்டு 43 இடங்களிலும், மதச்சார்பற்ற ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி 7 தொகுதிகளில் போட்டியிட்ட 4 இடங்களையும் வென்றிருந்தது. என வெற்றியை பெற்றிருக்கிறது. எனவே இந்த முறை அதிக இடங்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்-எல்) கேட்டிருக்கிறது. மொத்தம் 40 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கட்சி கேட்டிருந்தது. ஆனால் கூட்டணி தலைமை, வாய்ப்பே இல்லை ராஜா என்று கைவிரிக்க 30 தொகுதிகளுக்கு குறையாமல் போட்டியிட மாட்டோம் என்று கூறியிருக்கிறது. இக்கோரிக்கையை இன்னும் கூட்டணி தலைமை ஏற்கவில்லை. எனவே மகாபந்தன் கூட்டணியிலும் குழப்பம் உச்சக்கட்டத்தில் இருக்கிறது. விரைவில் இதற்கு தீர்வு காணப்பட்டால்தான் அடுத்தடுத்த பிரச்சார பணிகளை கட்சிகள் தீவிரப்படுத்த முடியும்.