வளமும், வாய்ப்பும் – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து

காரைக்குடி: அக். 16-
வள​மும், வாய்ப்​பு​களும் அனை​வருக்​கும் பொது​வாக இருக்க வேண்​டும் என்று ஆளுநர் ஆர்​.என்​.ரவி கூறி​னார். காரைக்​குடி அழகப்பா பல்​கலை.​யில் பண்​டிட் தீன்​த​யாள் உபாத்​யாயா இருக்கை சார்​பில் ‘வளர்ச்​சி​யடைந்த இந்​தி​யா–2047, நல்​லாட்​சி​யும் நிலை​யான வளர்ச்​சிக்கு வழி​காட்​டும் ஒருங்​கிணைந்த மனிதநேய​மும்’ என்ற தலைப்​பில் 2 நாள் தேசி​யக் கருத்​தரங்கு நேற்று தொடங்​கியது. துணைவேந்​தர் க.ரவி வரவேற்​றார்.
கருத்​தரங்​கைத் தொடங்கி வைத்து ஆளுநர் ஆர்​.என்​.ரவி பேசி​ய​தாவது: இளைஞர்​கள் பெரிய கனவு​களைக் காண​வும், தேசக் கட்டமைப்​பில் பங்​காற்​ற​வும் அப்​துல் கலாம் ஊக்​கமளித்​தார். ஆங்​கிலேயர் ஆட்​சிக் காலத்​தில் வரி வசூலிக்​கும் கருவி​களாக​வும், மக்​களை அச்​சுறுத்​தும் சாதனங்​களாக​வும் மாவட்ட நிர்​வாகம், காவல் துறை இருந்​தன. தற்​போது அந்​நிலை மாறி​யுள்​ளது. நமது ரிஷிகள், முனிவர்​கள், கவிஞர்​கள் தங்​கள் ஞானத்​தால் தலை​முறைக்கு ஏற்​றபடி சூழலை மாற்றி அமைத்​தனர்.நாட்​டில் 70 லட்​சம் பழங்​குடி​யினர் உள்​ளனர். அவர்​களில் 12 லட்​சம் பேர் தமிழகத்​தில் உள்​ளனர். அவர்​களுக்கு பலனளிக்​கும் திட்​டங்​களைச் செயல்​படுத்​தி​ய​வர் பிரதமர் மோடி. உணவு உள்​ளிட்ட பல்​வேறு வகை​களில் வேறு​பட்​டாலும் தீன்​த​யாள் உபாத்​யாயா தத்​து​வத்​தின்​படி நாம் அனை​வரும் ஒரே குடும்​பம்.
உலகின் 4-வது பெரிய பொருளா​தார நாடாக இந்​தியா மாறியதற்கு ஒருங்​கிணைந்த மனிதநேயமே காரணம். அது​வே, வெளி​யுறவுக் கொள்​கை​யிலும் உள்​ளது. வளமும், வாய்ப்​பு​களும் அனை​வருக்​கும் பொது​வாக இருக்க வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார்.
டெல்​லி​யில் உள்ள இந்​திய கலாச்​சார மையத் தலை​வர் வினய் பி.சஹஸ்​ரபுத்​தே, காந்​தி​கி​ராம நிகர்​நிலை பல்​கலை.
துணைவேந்​தர் பஞ்​சநதம் ஆகியோர் பேசினர். பதி​வாளர் செந்​தில்​ராஜன் நன்றி கூறி​னார். முன்​ன​தாக, அப்​துல் கலாம் பிறந்​த​நாளை​யொட்டி பல்​கலை. வளாகத்​தில் உள்ள அவரது சிலைக்கு ஆளுநர் மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​தி​னார். ஆளுநருக்கு மாவட்ட ஆட்​சி​யர் கா.பொற்​கொடி, காவல் கண்காணிப்பாளர் சிவபிர​சாத் ஆகியோர் பூங்​கொத்து கொடுத்து வரவேற்​றனர்.