திருப்பதி வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் ஆன்லைன் வெளியிடப்படும்

திருப்பதி, அக். 30-திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்தின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வருவார்கள். தரிசனத்திற்கு திருப்பதியில் டோக்கன்கள் வழங்கப்படும். அவ்வாறு பக்தர்களுக்கு டோக்கன் வழங்கப்படுவது சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால் ஆன்லைனில் தரிசன டிக்கெட் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்இந்தியாவில் மிகவும் பிரபலமான கோவில்களில் திருப்பதி திருமலையும் ஒன்று. திருப்பதிக்கு நினைத்த போதெல்லாம் பக்தர்களால் வர முடியாது என்பதும், அப்படி வர நேர்ந்தால் வாழ்க்கையில் கண்டிப்பாக திருப்புமுனை ஏற்படும் என்பதும் நம்பிக்கை. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே இந்த மலை அமைந்துள்ளது. கார்கள், வேன்கள், சொகுசு பேருந்துகள் என பலவற்றில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.