இன்சூரன்ஸ் படுகொலை? ரூ.21 கோடி மதிப்புள்ள எருமை திடீர் மரணம்

ஜெய்ப்பூர், நவ. 3- ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெறும் புஷ்கர் விலங்கு கண்காட்சியில் மிக மோசமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. அங்குக் கண்காட்சிக்குக் கொண்டு வரப்பட்ட ரூ.21 கோடி மதிப்புள்ள இந்தியாவின் மதிப்புமிக்க விலங்காகக் கருதப்பட்ட எருமை திடீரென உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நமது நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் விலங்குகள் கண்காட்சி நடைபெறும். கால்நடை வர்த்தகத்திற்கு விலங்கு கண்காட்சி முக்கியமாக கை கைகொடுக்கும். அப்படி ராஜஸ்தான் புஷ்கரில் நடக்கும் விலங்கு கண்காட்சி ரொம்பவே புகழ்பெற்றது. விலங்கு கண்காட்சி அங்கு ஒவ்வொரு ஆண்டும் புஷ்கர் விலங்கு கண்காட்சி நடைபெறும். அந்தக் கண்காட்சியில் நாடு முழுக்க இருந்து கொண்டு வரப்படும் விலங்குகள் காட்சிப்படுத்தப்படும். இதற்கிடையே அந்தக் கண்காட்சியில் கலந்து கொண்ட சுமார் 21 கோடி ரூபாய் மதிப்புள்ள எருமை திடீரென உயிரிழந்தது. இது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. எருமையின் உடல்நிலை திடீரென மோசமடைந்த நிலையில், இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. புஷ்கர் கண்காட்சிக்கு ஒவ்வொரு நாளும் அந்த எருமையைப் பார்க்கவே பல நூறு பொதுமக்கள் திரள்வார்கள். இதனால் அந்த விலைமதிப்பற்ற எருமையை புஷ்கருக்குக் கொண்டு வரச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அப்போதுதான் அதன் உடல்நிலை மோசமாக இருப்பதாகத் தகவல் வெளியானது. இது குறித்த தகவல் கிடைத்தவுடன் கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.. அந்த எருமையைக் காப்பாற்றத் தீவிரச் சிகிச்சை அளித்தனர். இருப்பினும், எருமையின் அதிக உடல் எடை மற்றும் மோசமடைந்திருந்த உடல்நிலை காரணமாக அதைக் காப்பாற்ற முடியவில்லை.இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இறந்த எருமையைச் சுற்றி அதன் பராமரிப்பாளரும் பொதுமக்கள் பலரும் இருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.