பிஹாரில் பாதுகாப்பு தொழில் துறை வழித்தடம்: அமித் ஷா வாக்குறுதி

பாட்னா: நவம்பர் 4-
ிஹார் தேர்தலை முன்னிட்டு ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி வேட்​பாளர்​களுக்​காக பிஹாரின் சிவஹர், சீதாமரி உள்​ளிட்ட பல்​வேறு பகு​தி​களில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா நேற்று வாக்கு சேகரித்​தார். அப்​போது அவர் பேசி​ய​தாவது:
மன்​னர் சந்​திரகுப்த மவுரியா ஆட்​சிக் காலம் முதல் இப்​போது வரை பிஹாரில் வெள்ள பாதிப்​பு​கள் நீடித்து வரு​கின்​றன. பிஹாரில் தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்சி அமைத்​தால் வெள்ள பாதிப்​பு​களுக்கு நிரந்தர முற்​றுப்​புள்ளி வைக்​கப்​படும்.
மேலும் பிஹாரில் பாது​காப்பு தொழில் துறை வழித்​தடம் அமைக்​கப்​படும். இதன்​மூலம் வேலை​வாய்ப்​பு​கள் பெரு​கும். மேலும் ஒவ்​வொரு மாவட்​டத்​தி​லும் தொழில் பூங்கா அமைக்​கப்​படும். பிஹார் இளைஞர்​களுக்கு சொந்த மாநிலங்​களி​லேயே வேலை​வாய்ப்பு கிடைக்​கும்.
பிஹாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆட்சி அமைத்​தால் கடத்​தல், கொள்​ளை, கொலைகளுக்​காக தனித்​தனி துறை​கள் உரு​வாக்​கப்​படும். ஊழலுக்​காக​வும் தனித் துறை அமைக்​கப்​படும்.
பிஹாரில் மீண்​டும் காட்​டாட்சி அமைவதை மக்​கள் விரும்​ப​வில்​லை. இவ்​​வாறு அமைச்​சர்​ அமித்​ ஷா பேசி​னார்​.