மோடி, அமித் ஷா மீது ராகுல் குற்றச்சாட்டு

புதுடெல்லி: நவ. 6-
ஹரி​யா​னா​வில் கடந்த ஆண்டு நடை​பெற்ற தேர்​தலில் 25 லட்​சம் வாக்​கு​களை திருடி பாஜக ஆட்​சி​யைப் பிடித்​த​தாக ஆதா​ரங்​களை வெளி​யிட்டு ராகுல் காந்தி குற்​றம்​சாட்​டி​யுள்​ளார். குறிப்​பாக, பிரதமர் மோடி, உள்​துறை அமைச்​சர் அமித் ஷா ஆகியோருடன் சேர்ந்​து, தேர்​தல் ஆணை​யம் சதி செய்​த​தாக அவர் தெரி​வித்​துள்​ளார்.பிஹார் மாநில முதல்​கட்ட தேர்​தல் இன்று நடை​பெறும் நிலை​யில், டெல்​லி​யில் உள்ள காங்​கிரஸ் தலை​மையகத்​தில் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது:கடந்த ஆண்டு நடை​பெற்ற ஹரி​யானா தேர்​தலின்​போது, அனைத்து கருத்​துக் கணிப்​பு​களுமே காங்​கிரஸ்​தான் வெற்றி பெறும் என்று தெரி​வித்​தன. ஆனால், தேர்​தல் முடிவு​கள் வேறு மாதிரி​யாக அமைந்​தன. வாக்​குத் திருட்​டின் மூலம் பாஜக​வுக்கு சாதக​மாக தேர்​தல் முடிவு​கள் மாற்​றியமைக்​கப்​பட்​டன.
இதற்​கான 100 சதவீத ஆதா​ரங்​களை “எச்​-பைல்​ஸ்” ஆக காங்​கிரஸ் தொகுத்துள்​ளது. அதில், ஒவ்​வொரு வாக்​கும் எவ்​வாறு திருடப்​பட்​டுள்​ளது என்று சான்​றுகளு​டன் நிரூபிக்​கப்​பட்​டுள்​ளது.
ஹரி​யா​னாவைப் போலவே மத்​திய பிரதேசம், சத்​தீஸ்​கர், மகா​ராஷ்டிர மாநிலங்​களில் நடை​பெற்ற தேர்​தல்​களி​லும் வாக்​குத் திருட்​டு​கள் நடை​பெற்​றுள்​ளன. இதனால் நாட்​டின் ஜனநாயக முறை சிதைக்​கப்​பட்​டுள்​ளதுடன், ‘ஜென் ஸீ’ இளைய சமு​தா​யத்​தினரின் எதிர்​கால​மும் அழிக்​கப்​பட்​டுள்​ளது. இதை இளைய தலை​முறை புரிந்​து​கொண்​டு, விழிப்​புணர்​வுடன் செயல்​படு​வது அவசி​யம்.
ஹரி​யானா தேர்​தலில் ஒரு நபர், ஒரே புகைப்பட அடை​யாள அட்​டையைக் கொண்டு 2 வாக்​குச் சாவடிகள் மூலம் 223 வாக்​கு​களை செலுத்​தி​யுள்​ளார். ஆனால், அதற்​கான சிசிடிவி ஆதா​ரங்​களை தேர்​தல் ஆணை​யம் அழித்​து​விட்​டது.
ஹரி​யானா வாக்​காளர் பட்​டியலில் 1.24 லட்​சம் வாக்​காளர்​களின் போட்​டோ போலி​யானது. 25 லட்​சம் வாக்​கு​கள் திருடப்​பட்​டுள்​ளன. இதில் 5.21 லட்​சம் போலி வாக்​காளர்​கள், 93,174 செல்​லாத வாக்​கு​கள், 19.26 லட்​சம் “பல்க்” வாக்​காளர்​கள் (ஒரே முகவரி​யில் பல வாக்​காளர்​கள்) அடங்​கு​வர். 8 பேரில் ஒரு​வர் போலி வாக்​காளர். ஒரே நபர் 18 முறை வாக்​களித்​துள்​ளார். காங்​கிரஸ் வெற்​றியை தடுப்​ப​தில் பாஜக​வுடன் தேர்​தல் ஆணை​யம் கைகோத்து செயல்​பட்​டுள்​ளது. தலைமை தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் கு​மார் மற்​றும் 2 தேர்​தல் ஆணை​யர்கள் பாஜக​வுடன் சேர்ந்​து​கொண்​டு, ஹரி​யா​னா​வில் காங்​கிரஸின் வெற்​றியை தடுத்​துள்​ளனர்.
இந்​திய தேர்​தல் ஆணை​யம், பிரதமர் மோடி மற்​றும் உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவுடன் கூட்டு சேர்ந்​து, நாட்​டின் ஜனநாயக அடித்​தளத்தை அழித்து விட்​டது. இவ்​வாறு ராகுல் காந்தி கூறி​னார்.ஜென் ஸீ இளைஞர்​களின் வாக்​குகளை திருடி பாஜக வெற்றி பெறு​வ​தாக ராகுல் காந்தி குற்​றச்​சாட்​டிய நிலையில், அதற்கு மத்​திய அமைச்​சரும், பாஜக தலை​வரு​மான கிரண் ரிஜிஜு அளித்த பதிலில், “அடிப்​படை ஆதா​ரமற்ற கட்​டுக்கதைகள் மூலம் ஜென் ஸீ இளைய தலை​ முறை​யினரை தூண்​டி​விடும் நடவடிக்​கை​யில் ராகுல் காந்தி ஈடு​பட்​டுள்​ளார். ஹரி​யானா வாக்​காளர் பட்​டியலுக்கு எதி​ராக இது​வரை யாரும் எந்த புகாரும் தெரிவிக்​க​வில்​லை. தோல்வி​களை மறைக்​கவே இவ்​வாறான பொய் குற்​றச்​சாட்​டு​களை ராகுல் அவ்​வப்​போது பரப்பி வரு​கிறார்” என்​றார்.