பாட்னா: நவம்பர் 6-
பீஹார் தேர்தலின் முதல்கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு தொடங்கி நடந்து வரும் நிலையில், வாக்காளர்கள் அனைவரும் தங்களது வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும் என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
பீஹாரில், 121 சட்டசபை தொகுதிகளில் இன்று (நவ.,06) காலை 7 மணிக்கு முதற்கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது.
121 தொகுதிகளில் பல்வேறு கட்சிகளை சார்ந்த 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த சூழலில், பீஹார் வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும் என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
இது குறித்து சமூகவலைதளத்தில் தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
ஜனநாயக திருவிழாவிற்கு பீஹார் தயாராக உள்ளது. வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும்.
வாக்காளர்கள் வாக்குச்சாவடியில் வரவேற்கப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.















