பாட்னா, நவ. 14- பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் என்னப்பட்டு வரும் நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி 150க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. தற்போதைய சூழலில் பாஜக மட்டும் 80க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் இருக்கும் நிலையில் பீகாரில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
மேலும், சட்டசபை மட்டுமல்லாது இதன் மூலம் மாநிலங்களவையிலும் பாஜகவுக்கு அதிக எம்பிகள் கிடைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 243 இடங்களை கொண்ட பீகார் சட்டசபை தேர்தல் இரு கட்டங்களாக நடைபெற்று நிறைவடைந்தது. நவம்பர் 6ஆம் தேதி முதற்கட்ட தேர்தலும், நவம்பர் 11ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலும் நடந்தது. முதல் கட்ட தேர்தலில் 121 தொகுதிகளில் சுமார் 65 சதவீத வாக்குகள் பதிவாகின. 243 இடங்களை கொண்ட பீகார் சட்டசபை தேர்தல் இரு கட்டங்களாக நடைபெற்று நிறைவடைந்தது. நவம்பர் 6ஆம் தேதி முதற்கட்ட தேர்தலும், நவம்பர் 11ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலும் நடந்தது. முதல் கட்ட தேர்தலில் 121 தொகுதிகளில் சுமார் 65 சதவீத வாக்குகள் பதிவாகின. இரண்டாம் கட்ட தேர்தல் நடந்த 122 தொகுதிகளில் 67 சதவீத வாக்குகள் பரிவானது. இதுவரை பீகார் வரலாற்றில் பதிவாகாத வாக்கு எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தமாக 66.91% வாக்குகள் பதிவான நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

















