5 ஜாம்பவான்கள் ஓய்வு

கொல்கத்தா, நவ. 14- இந்திய கிரிக்கெட்டின் முக்கிய இடமான கொல்கத்தாவின் புகழ்பெற்ற ஈடன் கார்டன் மைதானம், ஆறு ஆண்டு கால நீண்ட, நெடிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு டெஸ்ட் போட்டியை நடத்த உள்ளது. இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் இங்கு நடைபெற உள்ளது. ஆனால்,
இந்த ஆறு ஆண்டுகளில் இந்திய டெஸ்ட் அணியில் ஒரு தலைமுறை மாற்றமே நிகழ்ந்துவிட்டது. 2019-ல் இங்கு கடைசியாக ஆடிய இந்திய அணியில் இருந்து, 5 ஜாம்பவான்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர்,
5 முக்கிய வீரர்கள் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு விட்டனர். அன்றைய ஆடும் லெவனில் இடம்பெற்றிருந்த ஒரே ஒரு வீரர் மட்டுமே, தனி ஒருவனாக மீண்டும் களமிறங்குகிறார். இந்தியாவிலேயே அதிக டெஸ்ட் போட்டிகளை நடத்திய பெருமைக்குரிய ஈடன் கார்டன் மைதானம், இவ்வளவு நீண்ட காலம் டெஸ்ட் போட்டி இல்லாமல் இருந்தது இதுவே முதல் முறை. இதுவரை இங்கு 42 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. 2019-ல் வங்கதேசத்திற்கு எதிராக இந்தியாவின் முதல் பகலிரவு (Pink-ball) டெஸ்ட் போட்டி இங்குதான் நடைபெற்றது. அதன்பிறகு, இப்போதுதான் டெஸ்ட் கிரிக்கெட் இங்கு திரும்புகிறது.
1948-ம் ஆண்டிற்குப் பிறகு ஈடன் கார்டனில் டெஸ்ட் போட்டிக்கு இவ்வளவு நீண்ட இடைவெளி ஏற்பட்டது இதுவே முதல் முறையாகும். 2019-ல் ரவி சாஸ்திரியின் பயிற்சியின் கீழ், ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்த கையோடு, விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஈடன் கார்டனில் களமிறங்கியது. அந்த அணி, சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவின் மிகவும் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாகக் கருதப்பட்டது.