
சென்னை: நவம்பர் 14-
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 2025 ஜூலை 1-ம் தேதி முதல் முன்தேதியிட்டு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்கப்படுகிறது. பெரும்பாலும், 3 அல்லது 4 சதவீத உயர்வு அறிவிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. அடிப்படை சம்பளம் அடிப்படையில் கணக்கிடப்படும் இந்த அகவிலைப்படியானது 100 சதவீதம் என்ற அளவுக்கு வரும்போது, அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படும். அதன்பிறகு, அந்த சம்பளத்துக்கு அகவிலைப்படி அறிவிக்கப்படும்.
மேலும், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள கமிஷன் அமைக்கப்படும்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சம்பளங்கள் மாற்றி அமைக்கப்படும். மாநில அரசு ஊழியர்களுக்கும் இதே நடைமுறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது தமிழகத்தைப் பொருத்தவரை, மத்திய அரசு அறிவித்து பல மாதங்கள் கழித்து அகவிலைப்படி அறிவிக்கப்பட்டு முன்தேதியிட்டு வழங்கப்பட்டு வந்தது


















