5ம் தலைமுறை விமான தொழில்நுட்பங்களை.. அள்ளிக் கொடுக்கும் ரஷ்யா

மாஸ்கோ: நவம்பர் 20-
இந்தியாவிடம் 5ம் தலைமுறை போர் விமானங்கள் கிடையாது. அதை தயாரிப்பதும் செலவு அதிகம் பிடித்த வேலை. இப்படி இருக்கையில் ரஷ்யா தனது 5ம் தலைமுறை போர் விமானமான SU-57E-ன் தொழில்நுட்பத்தை இந்தியாவிடம் பகிர்ந்துக்கொள்ள ரெடி என்று அறிவித்திருக்கிறது. சர்வதேச அளவில் 3 நாடுகளிடம் மட்டுமே 5ம் தலைமுறை போர் விமானங்கள் இருக்கின்றன. ஒன்று அமெரிக்கா, இன்னொன்று ரஷ்யா, மூன்றாவது சீனா. ஆரம்பத்தில் ரஷ்யாவுடன் இணைந்து 5ம் தலைமுறை விமானங்களை தயாரிக்க இந்தியா திட்டமிட்டிருந்தது. ஆனால் அது வேலைக்கு ஆகவில்லை. செலவு அதிகம் இழுத்ததால், இந்த திட்டத்திலிருந்து இந்தியா கழன்றுக்கொண்டது. சீனாவிடம் 5ம் தலைமுறை விமானம் பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் நமக்கு பஞ்சாயத்து இருக்கிறது. இதில் சீனாவிடம் 5ம் தலைமுறை விமானங்கள் இருக்கின்றன. இந்த விமானங்களை வைத்திருக்கும் நாடுகள்தான் முதலில் தாக்குதலை தொடங்க முடியும். எதிரிகளின் ரேடார் தேடலுக்கு புலப்படாமல் இந்த விமானங்களால் பறக்க முடியும். நம்மிடம் இருக்கும் ரஃபேல் விமானங்களை விட, 5ம் தலைமுறை விமானங்கள் சிறப்பாக மறைந்திருந்து தாக்குதலை நடத்த முடியும். 5ம் தலைமுறை விமானங்களின் பலம் அதேபோல குறைந்த எரிபொருளை கொண்டு அதிக தூரத்திற்கும், மிக வேகமாகவும் பயணிக்க முடியும். போர் சூழலில் வேகம் மிக முக்கியம். ரஃபேல் விமானங்கள் அதிகபட்சமாக மணிக்கு 1,912 கி.மீ வரை பயணிக்கும். இது ஒலியின் வேகத்தில் 1.5 மடங்கு ஆகும். ஆனால் ரஷ்யாவின் SU-57 விமானம் மணிக்கு 2,136 கி.மீ தூரம் வரை பயணிக்கும். இத ஒலியின் வேகத்தில் 2 மடங்காகும். எனவே இந்தியாவுக்கு இந்த விமானங்கள் நிச்சம் தேவைப்படுகின்றன.
அமெரிக்க விமானங்கள் அமெரிக்காவிடம் விமானத்தை வாங்கினால், அது வெறும் விமானத்தை மட்டுமே கொடுக்கும். மற்றபடி தொழில்நுட்ப விவரங்களை கொடுக்காது. ஆனால் ரஷ்யா முழு தொழில்நுட்ப விவரங்களை கொடுப்பதுடன், லைசென்ஸ் பெற்று இந்தியாவில் SU-57E விமானங்களை தாயாரித்துக்கொள்ளவும் அனுமதி வழங்க ரெடியாக இருப்பதாக தெரிவித்திருக்கிறது. இப்படி எந்த நாடும் அள்ளி கொடுக்காது. அந்த வகையில் இந்த ஆஃபரை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இப்படி அச்சம் ஒருபுறம் இருந்தாலும், ரஷ்ய விமானங்களை வாங்குவதற்கான தேவைகள் நமக்கு அதிகம் இருக்கின்றன. இந்திய விமானப்படையின் தளபதி ஏபி சிங், விமானப்படைக்கு அடுத்த 10-20 ஆண்டுகளில் 40 புதிய போர் விமானங்கள் தேவைப்படுகிறது என்று கூறியிருக்கிறார். ஆகவே ரஷ்ய விமானங்களை வாங்குவதற்கு இதுவே சரியன தருணம்.