அமைச்சர் துரை முருகன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: நவம்பர் 20-
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காதில் ஏற்பட்ட வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது நலமாக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழக நீர்வளத்துறை அமைச்சராகவும், திமுகவின் பொதுச்செயலாளராகவும் இருந்து வருபவர் துரைமுருகன் (வயது 87). துரைமுருகனுக்கு வயது மூப்பு காரணமாக அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் நேற்று முன் தினம் துரைமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் துரைமுருகனுக்கு நேற்று முன் தினம் திடீரென காதில் வலி ஏற்பட்டு இருக்கிறது. இதையடுத்து உடனடியாக அவர் சென்னையில் உள்ள காது, மூக்கு, தொண்டை ஆராய்ச்சி மையத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பல்நோக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அமைச்சர் துரைமுருகனுக்கு தற்போது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். திடீரென காதில் வலி ஏற்பட்டது வயது மூப்பின் காரணமாக ஏற்படும் பாதிப்பு தான் எனவும் இப்போது நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.