நியூயார்க், நவ. 24- அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வங்கி இனி அடுத்த சில மாதங்களுக்கு வட்டி விகிதத்தை குறைக்காது என்று அறிவித்து உள்ளது. தற்போதைய தலைவருக்கு கீழ் வட்டி விகிதம் இனி குறைக்கப்படாது என்று அறிவித்து உள்ளது. அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வின் (Fed) அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான 5 பேர் கொண்ட பட்டியலை கருவூலச் செயலாளர் ஸ்காட் பெஸ்ஸென்ட் உறுதிப்படுத்தியுள்ளார். ஜெரோம் பவல் பதவி முடிவிற்கு வரும் நிலையில் இந்த புதிய தலைவர் அடுத்த ஆண்டு பொறுப்பேற்பார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய தலைவரின் பெயர் உறுதி செய்யப்படும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அவரின் இந்த முடிவு காரணமாக சர்வதேச அளவில் தங்கம் விலையில் பெரிய மாற்றங்கள் ஏற்படும். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அந்நாட்டு மத்திய வங்கி.. அதாவது இந்தியாவின் ரிசர்வ் வங்கி போன்ற அமைப்பிடம் கடுமையான மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார்.
அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவராக உள்ள ஜெரோம் பவலுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்து வருகிறார் டொனால்ட் டிரம்ப். ஜெரோம் பவல் இருக்கும் வரை வட்டி விகிதம் குறையாது இப்படிப்பட்ட நிலையில்தான் ஜெரோம் பவல் இருக்கும் வரை வட்டி விகிதம் குறைக்கப்படாது என்று தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஜெரோம் பவல் வட்டி விகித குறைப்பை கடுமையாக எதிர்க்கும் நிலையில், அவர் இருக்கும் வரை கண்டிப்பாக வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று அறிவித்துள்ளனர். அமெரிக்காவில் வட்டி விகிதம் குறைக்கப்படவில்லை என்றால்.. டாலர் வலிமை அடையும். டாலரின் மதிப்பு உயரும். அப்படி டாலரின் மதிப்பு உயர்ந்தால், தங்கத்தின் மதிப்பு குறையும். தங்கத்தின் மதிப்பு கடுமையாக சரிவை சந்திக்கும். டிரம்ப் எதிர்ப்பை மீறி.. ஜெரோம் பவல் இந்த முடிவை எடுப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே வட்டி விகிதம் தொடர்பாக.. மத்திய வங்கி மீது போர் தொடுக்க தயாராக இருப்பதாக டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகை அதிகாரிகளிடம் தெரிவித்து உள்ளார்.
அவர் விடுத்த எச்சரிக்கையில் அமெரிக்க மத்திய ரிசர்வ் வங்கி உடனே வட்டி மதிப்பை குறைக்க வேண்டும். வட்டி மதிப்பை (நம் நாட்டின் ரெப்போ ரேட் போல) உடனே குறைக்க வேண்டும். இல்லையென்றால் அவரை நீக்க வேண்டி இருக்கும். அந்த மத்திய வங்கி வேண்டும் என்றால் சுதந்திரமான அமைப்பாக இருக்கலாம். ஆனால் நான் நினைத்தால் அவரை நீக்க முடியும்.

















