காசர்கோடு, நவம்பர் 24-
பிரபல மலையாள பாடகி ஹனன் ஷாவின் இசை நிகழ்ச்சியில் நேற்று இரவு ஏராளமான மக்கள் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
புதிய பேருந்து நிலையம் அருகே நடந்த ஒரு கண்காட்சியின் ஒரு பகுதியாக ஹனனின் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, இசையைக் கேட்க ஏராளமான மக்கள் கூடியதால் நெரிசல் ஏற்பட்டு பலர் மயங்கி விழுந்தனர் 10 பேர் உடனடியாக சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் சிலர் மேல் சிகிச்சைக்காக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சிகிச்சை பெற்ற அனைவரும் குணமடைந்துள்ளனர், அதிர்ஷ்டவசமாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. ஏராளமான மக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் குழப்பம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், நிகழ்ச்சியை நிறுத்த உத்தரவிட்டார். கூடியிருந்த மக்கள் மீது தடியடி நடத்தினார்.
காவல்துறை சரியான நேரத்தில் தலையிட்டதால் ஏற்படக்கூடிய கூட்ட நெரிசல் தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக ஐந்து ஏற்பாட்டாளர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.















