புதுடெல்லி: நவம்பர் 26-
டெல்லியிலுள்ள குச்சா மகாஜனி மார்க்கெட்டில் ஹவாலா ஏஜென்டாக இருந்தவர் பவன் குமார். இவர் டெல்லி, துபாய் இடையே பயணம் செய்து தனது வியாபாரத்தைப் பெருக்கி வந்தார்.
போதைப்பொருளை கடத்தும் பணியில் ஈடுபட்டு வந்த இவர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் துபாயிலிருந்து இந்தியாவுக்கு ரூ.2,500 கோடி மதிப்புள்ள 82 கிலோ கோகைன் போதைப்பொருளை கடத்தியுள்ளார். அதை டெல்லியிலுள்ள போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.மேலும், கடந்த வாரம் ரூ.282 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை பவன் குமார் ஆட்கள் கடத்த முயன்றபோது அதையும் டெல்லி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவர் தனது போதைப்பொருள் கடத்தல் தொழிலை செய்து வந்தார்.இதன்மூலம் உலகம் முழுவதும் பவன் குமாருக்குபவன்குமார் தொடர்பான வழக்குகளை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
இந்நிலையில் அவர் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்.















