பிஜேபி விஎச்பி கண்டன ஆர்ப்பாட்டம்

புதுடெல்லி: நவம்பர் 26-
ஜம்​மு-​காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மாதா வைஷ்ணவ தேவி இன்​ஸ்​டிடியூட் ஆஃப் மெடிக்​கல் எக்​ஸலன்ஸ் என்ற பெயரில் மருத்​து​வக் கல்​லூரி இந்த ஆண்டு முதல் செயல்​படத் தொடங்​கி​யுள்​ளது.
இந்த மருத்​து​வக் கல்​லூரியை நடத்தி வரு​வது மாதா வைஷ்ணவ தேவி கோயில் வாரி​யம் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.
இந்​நிலை​யில் இந்​தக் கல்​வி​யாண்​டில் இந்​தக் கல்​லூரி​யில் உள்ள 50 எம்​பிபிஎஸ் இடங்​களும் நீட் தேர்வு மதிப்​பெண் அடிப்​படை​யில் நிரப்​பப்​பட்​டன. இதில் 42 முஸ்​லிம் மாணவர்​களும், 8 இந்து மாணவர்​களும் சேர்க்​கப்​பட்டு பட்​டியல் வெளி​யிடப்​பட்​டது. இந்​நிலை​யில் இதை கண்​டித்து விஎச்​பி, பஜ்ரங் தள், பாஜக​வினர் நேற்று ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.இந்த கல்​லூரியை நடத்​து​வது மாதா வைஷ்ணவ தேவி கோயில் வாரி​யம் என்​ப​தால் கல்​லூரி​யில் மருத்​து​வப் படிப்​பு​களுக்கு இந்து மத மாணவர்​களுக்கு முன்​னுரிமை அளிக்​க வேண்​டும் என்று கோரிக்கை விடுத்​தனர்.மேலும் இந்த கோயில் வாரி​யம், இந்து மதத்​தைச் சேர்ந்த ஏராள​மான பக்​தர்​கள் கொடுக்​கும் நிதி​யுத​வி​யால் நடத்​தப்​படு​கிறது. எனவே, இந்து மாணவ, மாணவி​கள் நலனைப் பாது​காத்து அவர்​களுக்கு எம்​பிபிஎஸ் இடங்​களை வழங்க முன்​வர​வேண்​டும் என்​றும் அவர்​கள் கோஷம் எழுப்​பினர்.
‘‘இந்த மருத்​துவக் கல்​லூரி​யில் சேர்க்கை என்​பது மதிப்​பெண் அடிப்​படை​யில் மட்​டும் தான்.
கல்​லூரிக்கு சிறு​பான்மை அந்​தஸ்து இல்​லாத​தால், மத அடிப்​படையி​லான இடஒதுக்​கீட்​டைப் பயன்​படுத்த முடிய​வில்​லை’’ என்று தெரி​வித்​தனர்.இதுகுறித்து ஜம்​மு-​காஷ்மீர் முதல்​வர் உமர் அப்​துல்லா கூறும்​போது, “திறமை அடிப்​படை​யில் மட்​டும்​தான் கல்​லூரி​யில் எம்​பிபிஎஸ் இடம் அளிக்​கப்​படு​கிறது. திறமை, மதிப்​பெண் அடிப்​படை​யில் இடம் அளிக்க வேண்​டாம் என்​றால் அவர்​கள் உச்ச நீதி​மன்​றத்தை அணுகி நீதி​மன்ற ஆணையை பெற்​றுக்​கொண்​டு இங்​கு வரலாம்​’’ என்​றார்​.