ராக்கெட் விக்ரம் 1-ஐ அறிமுகம் செய்து வைத்தார் பிரதமர் மோடி

ஹைதராபாத், நவ. 28- ஸ்கைரூட் ஏரோஸ்​பேஸ் நிறு​வனத்​தின் விக்​ரம் 1 ராக்​கெட்டை பிரதமர் மோடி நேற்று அறி​முகம் செய்​தார். அதோடு ஹைதரா​பாத்​தில் ஸ்கைரூட் நிறு​வனத்​தின் இன்ஃபினிட்டி வளாகத்​தை​யும் பிரதமர் மோடி திறந்து வைத்​தார். இஸ்ரோ நிறு​வனத்​தின் முன்​னாள் விஞ்​ஞானிகள் மற்​றும் ஐஐடி முன்​னாள் மாணவர்​களால் உரு​வாக்​கப்​பட்ட நிறு​வனம் ஸ்கைரூட் ஏரோஸ்​பேஸ்.
இது நாட்​டின் முதல் தனி​யார் விண்​வெளி நிறு​வனம். இந்​நிறு​வனம் தயாரித்த விக்​ரம்​-எஸ் என்ற சிறிய ரக ராக்​கெட் கடந்த 2022 நவம்​பர் மாதம் வெற்​றிகர​மாக ஏவப்​பட்​டது.
இந்​நிறு​வனம் தற்​போது செயற்​கைக்கோள்களை புவியின் சுற்​று​வட்​ட​பாதை​யில் நிலை நிறுத்​த கூடிய ராக்​கெட்​டு​களை வர்த்தக ரீதி​யில் அனுப்ப தயா​ராகி​யுள்​ளது. இந்​நிறு​வனம் ஹைத​ராா​பாத்​தில் 2 லட்​சம் சதுர அடி​யில் மிகப் பெரிய வளாகத்தை அமைத்​துள்​ளது. இன்ஃபினிட்டி என்ற பெயரில் தொடங்​கப்​பட்ட இந்த வளாகத்தை நேற்று காணொளி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்​தார். அதோடு ஸ்கைரூட் ஏரோஸ்​பேஸ் நிறு​வனம் தயாரித்த விக்​ரம் 1 என்ற ராக்​கெட்​டை​யும் பிரதமர் மோடி அறி​முகம் செய்​தார். இந்த வளாகம் மாதத்​துக்கு ஒரு ராக்​கெட்டை உரு​வாக்​கும் திறன் படைத்​தது என அதன் நிறு​வனர் பவன் சந்​தனா கூறி​யுள்​ளார்.