திருவண்ணாமலையில் மகா தேரோட்டம் கோலாகலம்

திருவண்ணாமலை: ​டிசம்பர் 1-திரு​வண்​ணா​மலை அண்​ணா​மலையார் கோயி​லில் நடை​பெறும் பிரசித்தி பெற்ற கார்த்​திகை தீப திரு​விழா கடந்த 24-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது.
திரு​விழா​வின் 7-ம் நாள் உற்​சவ​மான நேற்று மகா தேரோட்டம் கோலாகரமாக நடை​பெற்​றது. தேரோட்​டத்​தையொட்டி அதி​காலை கோயில் நடை திறக்​கப்​பட்டு சுவாமிக்​குச் சிறப்பு அபிஷேக ஆராதனை​கள் நடைபெற்றன.
பின்​னர், ராஜகோபுரம் எதிரே உள்ள அலங்​கார மண்​டபத்தில் சிறப்பு அலங்​காரத்​தில் பஞ்ச மூர்த்​தி​களான விநாயகர், வள்ளி தெய்​வானை சமேத முரு​கர், உண்​ணா​முலை​யம்​மன் சமேத அண்​ணா​மலை​யார், பராசக்தி அம்​மன், சண்​டிகேஸ்​வரர் அவர்​களுக்​குரிய ரதங்​களில் எழுந்​தருளினர்.
அதைத்​தொடர்ந்து பஞ்​சரதங்​கள் வீதி​யுலா​வின் தொடக்​கத்​தில் முதலா​வ​தாக விநாயகர் தேர் காலை 7.10 மணிக்​குப் புறப்​பட்​டது. இதில் ஏராள​மான பக்​தர்​கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்​துச் சென்​றனர். பின்​னர் காலை 11 மணி அளவில் முரு​கர் தேர் புறப்​பட்​டது. இதில் வள்ளி தெய்​வானை சமேத முரு​கர் எழுந்​தருளி​னார்.
அதைத்​தொடர்ந்து சுவாமி தேர் என அழைக்​கப்​படும் மகா ரதம் மாலை 4 மணிக்​குத் தொடங்​கியது. அப்​போது மாட​வீ​தி​யில் திரண்​டிருந்த பக்​தர்​கள் அண்​ணா​மலை​யாருக்கு ‘அரோக​ரா’ என பக்தி முழக்​கமிட்​டபடி வடம் பிடித்து தேரை இழுத்​துச் சென்​றனர்.
பக்​தர்​கள் வெள்​ளத்​தில் உண்​ணா​முலை​யம்​மன் சமேத அண்​ணா​மலை​யார் மகா ரதத்​தில் பவனி வந்து பக்​தர்​களுக்கு அருள்​பாலித்​தார்.
இதில் சட்டப்பேரவை துணைத் தலை​வர் கு.பிச்​சாண்​டி, மாவட்ட ஆட்​சி​யர் க.தர்ப்​பக​ராஜ், வேலூர் சரக டிஐஜி தர்​ம​ராஜ், திமுக மாநில மருத்​து​வர் அணி துணைத் தலை​வர் எ.வ.வே.கம்​பன் மற்​றும் முக்​கிய பிர​முகர்கள் தேர் வடம் பிடித்து இழுத்​தனர்.மாட​வீ​தி​களில் வலம் வந்த மகாரதம் இரவு 10.30 மணி அளவில் நிலைக்கு வந்​தது. அதன்​பின்​னர், 11 மணி அளவில் பராசக்தி அம்​மன் அலங்​காரரூபத்​தில் எழுந்​தருளி அம்​மன் தேரோட்டம் நடை​பெற்​றது. அம்​மன் தேரை தேரோட்​டத்​தின் மரபின்​படி பெண்​கள் மட்​டுமே வடம் பிடித்து இழுத்​துச் சென்​றனர். நிறை​வாக சண்​டிகேஸ்​வரர் தேரோட்டம் நடை​பெற்​றது.
இதன்படி விடிய விடிய வீதி​யுலா நடை​பெற்​றது. தேரோட்​டத்​தையொட்டி 3 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் பாது​காப்​பு பணி்யில் ஈடுபட்டனர்.
திரு​விழா​வின் 8-ம் நாள் உற்​சவ​மான இன்று காலை வெள்ளி மூஷிக வாக​னத்​தில் விநாயகர், குதிரை வாக​னத்​தில் சந்​திரசேகரர் பவனி மற்​றும்.
மாலை 4 மணிக்கு தங்​கமேரு வாக​னத்​தில்​ பிச்​சாண்​ட​வர்​ உற்​சவம்​ நடைபெறுகிறது. இரவு பெரிய குதிரை வாகனத்தில் அம்மன் சமேத அண்ணாமலையார் எழுந்தருள்கிறார்.