பெங்களூரில் விபத்து – ஒருவர் பலி

பெங்களூரு: டிசம்பர் 1-
வேகமாகச் சென்ற பைக் மரத்தில் மோதி ஒருவர் உயிரிழந்த துயர சம்பவம் இன்று காலை யெலஹங்கா புறநகர் அருகே நடந்தது. யெலஹங்கா புறநகர்ப் பகுதியில் உள்ள உன்னிகிருஷ்ணன் வட்டம் அருகே அதிகாலை 3.30 மணியளவில் அதிவேகமாகச் சென்ற பைக் மரத்தில் மோதியதில் யெலஹங்காவைச் சேர்ந்த நாகப்பா (34) உயிரிழந்தார்.
யெலஹங்கா புறநகர்ப் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளைஞர் மரணம்: நேற்று இரவு மகாதேவபுரா அருகே சன்னசந்திரா பிரதான சாலையில் உள்ள சோடியாக் ஷோரூமுக்கு முன்னால், சாலைத் தடுப்பில் மோதியதில் ஒரு இளைஞர் உயிரிழந்தார்.இறந்த அன்ஷுமித்ரா (33), பைக்கில் வேகமாகச் சென்றபோது சாலைத் தடுப்பில் மோதி இறந்தார். மகாதேவபுரா போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.