திருப்பதி வைகுண்ட ஏகாதசி தரிசனம்

திருப்பதி: டிசம்பர் 2-
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் தரிசனத்திற்கு லக்கி டிப் முறையில் பதிவான டிக்கெட் முடிவுகள் இன்று மதியம் 2 மணிக்கு வெளியாகிறது. வைகுண்ட ஏகாதசி டிசம்பர் 30-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. வைணவ கோயில்களில் கொண்டாடப்படும் இந்த விழாவை காண பலரும் பல்வேறு பெருமாள் கோயில்களுக்கு செல்வர். அந்த வகையில் ஏழுமலையான் கோயிலிலும் வைகுண்ட துவார தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.
s டிசம்பர் 30ஆம் தேதி முதல் ஜனவரி 8ஆம் தேதி வரை 10 நாட்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் வழியாக ஏழுமலையானை தரிசிக்கலாம். சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதால் டிசம்பர் 30, 31, ஜன.1 ஆகிய தேதிகளில் லக்கி டிப் முறையில் இலவச தரிசனத்திற்கான டிக்கெட்டுகளை தேவஸ்தானம் ரிலீஸ் செய்வதாக அறிவித்தது. அதன்படி நவம்பர் 27ஆம் தேதி காலை 10 மணி முதல் நேற்று வரை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் விண்டோ ஓபனில் இருந்தது. சுமார் 25 ஆயிரம் டிக்கெட்டுகளுக்கு 1.75 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் யாரெல்லாம் இந்த குலுக்கலில் தேர்வு செய்யப்பட்டு சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறித்த குலுக்கல் முடிவுகள் இன்று மதியம் 2 மணிக்கு வெளியாகிறது.
இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு வரும் டிசம்பர் 30ம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக ஜனவரி 8ம் தேதி வரை என மொத்தம் 10 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.
இந்நிலையில், பக்தர்களின் கூட்டத்தை கருத்தில் கொண்டும், இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக டிசம்பர் 30, 31, ஜனவரி 1 ஆகிய 3 நாட்களுக்கு அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டு, இலவச தரிசனத்தில் மட்டும் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என அறங்காவலர் குழுவில் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது.