சீனா, ஜப்பான்தான் எங்களுக்கு போட்டி – ரேவந்த் ரெட்டி

ஹைதராபாத்: டிசம்பர் 2 –
சீ​னா, ஜப்​பான்​தான் எங்​களது போட்​டி​யாளர்​கள், ஆந்​திரா அல்ல என்று தெலங்​கானா முதல்​வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்​ளார்.
`2047-க்​குள் தெலங்​கா​னாவை வளர்ச்சி பெற்ற மாநில​மாக எழுப்புவோம்’ என்ற பெயரில் தொலைநோக்​குத் திட்​டத்தை முதல்​வர் ரேவந்த் ரெட்டி நேற்று ஹைத​ரா​பாத்​தில் வெளி​யிட்​டார்.
Vision 2047பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் பேசி​ய​தாவது: 2047-க்​குள் தெலங்கானாவை மிக​வும் வளர்ச்சி பெற்ற மாநில​மாக மாற்​று​வதே எங்களது இலக்​கு. அதற்​கான முதல்​படி​தான் இந்த 2047 விஷன் திட்​டம். சீனா, ஜப்​பான், தென் கொரி​யா, சிங்​கப்​பூர் போன்ற நாடு​கள் வளர்ச்சி பெற்று இருப்​ப​தைப் போலவே தெலங்​கா​னாவை மாற்​ற இந்த பரந்த திட்​டத்தை உரு​வாக்​கி​யுள்​ளோம். தென் கொரி​யா, சிங்​கப்​பூர், சீனா, ஜப்​பான் ஆகிய நாடு​கள்​தான் எங்​களது போட்​டி​யாளர்​கள். ஆந்​தி​ரா, தமிழ்​நாடு உள்​ளிட்ட மாநிலங்​களை நாங்​கள் போட்​டி​யாளர்​களாக கருத​வில்​லை. ஆசிய பொருளா​தார வல்​லரசு நாடு​களுக்கு எதி​ராக தெலங்​கானா அரசு தனது அளவு​கோலை நிர்​ண​யித்து வரு​கிறது. அந்த நாடு​களைப் போலவே தெலங்​கா​னா​வின் வளர்ச்​சியை பன்​மடங்​காக அதி​கரிப்​போம். நாட்​டின் வளர்ச்சியில் 10% வளர்ச்சி தெலங்​கா​னா​விலிருந்து செல்ல வேண்டும் என்ற நோக்​கத்​தில் இதை தயாரித்​துள்​ளோம். தொலைநோக்கு பார்வை மற்றும் அதை செயல்​படுத்தி அணுகும்​விதத்​தில் திட்​டம் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. இந்த திட்​டம் வரும் 8,9ம் தேதி​களில் ஹைத​ரா​பாத்​தில் நடை​பெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்​டில் அதி​காரப்​பூர்​வ​மாக அறி​முகம் செய்யப்​படும். இந்​தத் திட்​ட​மானது நிதி ஆயோக் மற்​றும் இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ்​(ஐஎஸ்​பி) ஆகிய​வற்​றுடன் இணைந்து விரி​வாகத் தயாரிக்​கப்​பட்​டுள்​ளது.
மெட்ரோ ரயில் திட்​டத்தை விரி​வாக்​கம் செய்​தல், புதி​தாக பாரத் ஃபியூச்​சர் சிட்​டியை அமைத்​தல், புதிய பசுமைப்​பாதை நெடுஞ்சாலை அமைத்​தல், மச்​சிலிப்​பட்​டினத்தை இணைக்​கும் வகை​யில் புல்​லட் ரயில் திட்​டம் போன்ற திட்​டங்​கள் அதில் அடங்கி​யுள்​ளன. மேலும் மாநிலத்​தில் புதி​தாக மேலும் சில விமான ​நிலை​யங்​களை அமைக்க முடிவு செய்​துள்​ளோம். வாராங்​கல், அடிலா​பாத், கொத்தகுடேம், ராமகுண்​டம் போன்ற இடங்​களில் விமான​நிலை​யங்​களை அமைப்​ப​தற்​கான திட்​டம் தயாரிக்​கப்​பட்டு வரு​கிறது. நெடுஞ்​​சாலைகள், துறை​முகங்​கள்​, வி​மான​ நிலை​யங்​கள்​​ தான்​ ​மாநிலத்​துக்​கு அதிக அளவி​லான வெளி​நாட்​டை முதலீட்​டை​ கொண்​டு வரும்.இவ்​​வாறு அவர்​ தெரிவித்​​தார்​.