திருநங்கைகளுக்கு பாதுகாவலர் பணி

ஹைதராபாத்: டிசம்பர் 3 –
ஹைத​ரா​பாத் மெட்​ரோ ரயில் (எச்​எம்​ஆர்​எல்) நிறு​வனம் நாட்​டின் மிகப்​பெரிய மற்​றும் மிக​வும் மேம்​படுத்​தப்​பட்ட நகர்ப்​புற போக்​கு​வரத்து சேவை அமைப்​பாக உள்​ளது. 57 நிறுத்​தங்களை உள்​ளடக்​கிய 3 வழித்​தடங்​களில் ஹைத​ரா​பாத் மெட்​ரோ ரயில் சேவை வழங்​கப்​பட்டு வரு​கிறது. தின​மும் 5 லட்​சம் பேர் ஹைத​ரா​பாத் மெட்​ரோ ரயில்​களில் பயணிக்​கின்​றனர்.இந்த நிலை​யில் பயணி​கள் அதி​லும் குறிப்​பாக பெண் பயணி​களின் பாது​காப்​புக்​காக ஹைதா​பாத் மெட்​ரோ 20 திருநங்​கைகளை தேர்வு செய்து அவர்​களுக்கு தேவை​யான பயிற்​சிகளை அளித்து பாது​காப்பு பணி​யில் இணைத்​துக்​கொண்​டுள்​ளது.
இதன் மூலம், திருநங்​கைகளுக்கு சமூக அதி​காரமளித்​தல் உறுதி செய்​யப்​பட்​டுள்​ளதுடன், பயணி​கள் பாது​காப்​பும் மேம்​படும் என்று ஹைத​ரா​பாத் மெட்​ரோ தெரி​வித்​துள்​ளது.
இதுகுறித்து எச்​எம்​ஆர்​எல் கூறுகை​யில், “மொத்த பயணி​களில் 30% பேர் பெண்​கள். எனவே, அவர்​களின் பாது​காப்​பு, வசதி மற்​றும் நம்​பிக்கை ஆகிய​வற்​றுக்கு மிக முக்​கிய​மான முன்​னுரிமை தந்து நடவடிக்​கைகளை எடுத்து வரு​கிறோம்’’ என்று தெரி​வித்​துள்​ளது.
சமூகத்​தில் புறக்​கணிக்​கப்​பட்ட விளிம்பு நிலை மக்களுக்கு சமமான வாய்ப்​பு, கண்​ணி​ய​மான வாழ்கை கிடைப்​ப​தற்கு தெலங்​கானா அரசு பல்​வேறு முன்​னெடுப்​பு​களை மேற்​கொண்டுள்​ளது. அதன் ஒரு பகு​தி​யாகவே கடந்த ஆண்டு உதவி போக்​கு​வரத்து மார்​ஷல்​ஸ் பணி​கள் திருநங்​கைகளுக்கு வழங்​கப்​பட்​டது.