இலங்கைக்கு பாக். அனுப்பியது காலாவதியான பொருட்களா?

புதுடில்லி: டிசம்பர் 3-
புய​லால் பாதிக்​கப்​பட்ட இலங்​கைக்கு காலா​வ​தி​யான நிவாரணப் பொருட்​களை பாகிஸ்​தான் அனுப்​பி​யுள்​ள​தாக சமூக வலை​தளங்​களில் பலரும் கடும் கண்​டனம் தெரி​வித்து வரு​கின்​றனர்.டிட்வா புய​லால் இலங்​கை​யில் பெரும் பாதிப்பு ஏற்​பட்​டுள்​ளது. மழை வெள்​ளம், நிலச்​சரி​வில் சிக்கி இது​வரை 330-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்​ளனர். மேலும், நூற்​றுக்​கும் மேற்​பட்​டோர் காணா​மல் போயுள்​ளனர். இலங்கைக்கு இந்​தியா சார்​பில் நிவாரணப் பொருட்​கள் விமானங்​களில் அனுப்பி வைக்​கப்​பட்​டுள்​ளன.
இந்​நிலை​யில், இலங்​கை​யில் உள்ள பாகிஸ்​தான் தூதரகம் எக்ஸ் வலை​தளத்​தில் நேற்று ஒரு பதிவை வெளி​யிட்​டது. அதில், ‘‘பாகிஸ்​தானில் இருந்து வந்த நிவாரணப் பொருட்​கள், இலங்​கை​யில் புய​லால் பாதிக்​கப்​பட்ட நமது சகோ​தர, சகோ​தரி​களுக்கு வெற்​றிகர​மாக விநி​யோகம் செய்​யப்​பட்​டுள்​ளது. இந்த உதவி இலங்​கைக்கு பாகிஸ்​தானின் ஆதரவு எப்​போதும் உள்​ளது என்​பதை வெளிப்​படுத்​துகிறது’’ என்று கூறப்​பட்​டிருந்​தது. அத்​துடன், நிவாரணப் பொருட்​களின் புகைப்​படங்​களை​யும் வெளி​யிட்​டது.
ஆனால், சமூக வலை​தள​வாசிகள் பலர் அந்த நிவாரணப் பொருட்​களில் உள்ள ‘எக்​ஸ்​பையரி டேட்​’டை கவனித்​துள்​ளனர். அதில், நிவாரணப் பொருட்​களின் பாக்​கெட்​டு​களில் ‘அக்​டோபர் 2024’ என்று அச்​சிடப்​பட்​டுள்​ளது. கடந்த ஆண்டு அக்​டோபர் மாதமே காலா​வ​தி​யான பொருட்​களை நிவாரணம் என்ற பெயரில் இலங்​கைக்கு பாகிஸ்​தான் அனுப்​பி​யுள்​ளது என்று கடுமை​யாக விமர்​சித்து வரு​கின்​றனர்.