200 இண்டிகோ விமானங்கள் ரத்து

புதுடெல்லி: டிசம்பர் 4 –
இண்​டிகோ நிறு​வனத்​தின் 200 விமானங்​கள் நேற்று ரத்து செய்​யப்​பட்​ட​தால் பயணி​கள் மிகுந்த அவதிக்கு ஆளாகினர்.
இந்​தி​யா​வின் மிகப்​பெரிய விமான நிறு​வன​மான இண்​டிகோ, சமீபத்​திய ஆண்​டு​களில் விமானம் தாமதம், ரத்து என அதன் செயல்​பாட்​டில் கடும் பிரச்​சினை​களை எதிர்​கொண்டு வரு​கிறது. இண்​டிகோ விமானங்​கள் நீண்ட கால​மாக சரி​யான நேரத்​தில் இயக்​கப்​பட்டு வந்த நிலை​யில் தற்​போது அதன் 35 சதவீத விமானங்​கள் மட்​டுமே குறித்த நேரத்​தில் இயக்​கப்​படு​வ​தாக செவ்​வாய்​கிழமை வெளி​யான அரசுப் புள்​ளி​விவரம் தெரிவிக்​கிறது.
இந்​நிலை​யில் நேற்று நாடு முழு​வதும் டெல்​லி, மும்​பை, பெங்​களூரு, ஹதரா​பாத் உள்​ளிட்ட நகரங்​களில் இருந்து புறப்பட வேண்​டிய சுமார் 200 இண்​டிகோ விமானங்​கள் ரத்து செய்​யப்​பட்​டன. இதனால் பயணி​கள் மிகுந்த அவதிக்கு ஆளாகினர்.
இதற்கு விமானிகள் உள்​ளிட்ட பணி​யாளர்​கள் பற்​றாக்​குறை முக்​கிய காரண​மாக கூறப்​படு​கிறது. விமானிகள் பணிநேர வரம்பு (எப்​டிடிஎல்) தொடர்​பான திருத்​தப்​பட்ட விதி​முறை​கள் கடந்த மாதம் அறி​முகம் செய்​யப்​பட்​டது. இது விமானிகள் பணி நேரத்தை ஒரு நாளில் 8 மணி நேரம், வாரத்​தில் 35 மணி நேரம், ஒரு மாதத்​தில் 125 மணி நேரம் ஓராண்​டில் 1,000 மணி நேரம் வரையறுக்​கிறது.
விமானிகளுக்கு கட்​டாய ஓய்வு நேரத்​தை​யும் இது வரையறுக்​கிறது. இந்த விதி​களுக்கு ஏற்ப விமானிகளின் பணிநேரத்தை மாற்றி அமைக்க முடி​யாமல் இண்​டிகோ திணறுகிறது.