மனைவியை கொன்று கணவர் தற்கொலை

பெங்களூரு: டிசம்பர் 4 –
கால் நடக்க முடியாமல் வீல் சேரில் இருந்த தனது மனைவியை கொடூரமாக கொன்ற கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. சுப்பிரமணியபுராவின் சிக்ககவுடனபாளையாவில், இந்த சம்பவம் நடந்துள்ளது. பெங்களூர் மாநகர போக்குவரத்து கழகத்தில்
( பிஎம்டிசி) டிரைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் வெங்கடேசன் (65) நேற்று இரவு தனது மனைவி பேபியை (65) கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இவரது மனைவி பக்கவாதம் ஏற்பட்டதால் கடந்த சில மாதங்களாக நடக்க முடியாமல் இருக்கிறார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். வீட்டில் யாரும் இல்லாத போது கணவன் மனைவியிடையே சண்டை வந்துள்ளது.ஒ
சண்டையால் ஆத்திரமடைந்த வெங்கடேசன், துணி உலர்த்தும் கம்பியால் தனது மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் அதே கம்பியைப் பயன்படுத்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மதியம் மருமகள் வீட்டிற்கு வந்தபோது, ​​வீட்டில் சடலங்கள் இருப்பதைக் கண்டார். உடனடியாக சுப்பிரமணியபுரா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் ஆய்வு நடத்தி, வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடர்கின்றனர்.