சுவர்ண சவுதாவில் கர்நாடக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது

பெலகாவி: டிசம்பர் 8-
பெலகாவி சுவர்ண சவுதாவில் கர்நாடக மாநில சட்டசபையின் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. வரும் 19ஆம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு முக்கிய விவாதங்கள் நடைபெற உள்ளன. இந்த நிலையில் கூட்டம் தொடங்கியவுடன் பிஜேபி மற்றும் ஜனதா தளம் எஸ் கட்சி உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி அவையை நடத்த விடாமல் செய்ய முடிவு செய்துள்ளனர்.

சட்டமன்றத்தில் கலந்து கொள்ளும் முதல்வர் துணை முதல்வர் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் எம்எல்ஏ சிக்கல உள்ளிட்டோருக்கு விதவிதமான ரக ரகமான அறுசுவை உணவுகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. சட்டசபையை முடக்க முடிவு செய்துள்ள பிஜேபி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆர் அசோக் அவர்கள் அவைக்கு வருகை தந்த போது அவரிடம் முதல்வர் சித்தராமையா சிரித்தபடி நலம் விசாரித்தார்.

மத்திய உளவுத்துறை எச்சரிக்கை காரணமாக சட்டசபை சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது ட்ரோன்கள் படக்க தடை விதிக்கப்பட்டுள்ளது