
பெங்களூரு, டிச. 11: பெங்களூரில் நடைபெறும் தமிழ் புத்தகத் திருவிழாவிற்கு தமிழர்கள் அமோக ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
பெங்களூரு அம்பேத்கர் வீதியில் உள்ள் இன்ஸ்டிடியூட் ஆப் என்ஜினியர்ஸ் வளாகத்தில் டிச. 5 ஆம் தேதி தொடங்கி, 14 ஆம் தேதி வரை தமிழ் புத்தகத்திருவிழா தொடங்கி, நடைபெற்று வருகிறது. 6ம் நாளில் மாணவர்களுக்கான போட்டிகள், வில்லிசை பாட்டு, பட்டிமன்றம் ஆகியவை நடைபெற்றன. புத்தகத் திருவிழாவிற்கு மக்கள் அமோக ஆதரவு அளித்து, தமிழ், கன்னடம், ஆங்கில புத்தகங்களை வாங்கி வருகின்றனர்.இதனிடையே 6 ஆம் நாளான புதன்கிழமை உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான பேசுவது தமிழா, பாட்டுபாடவா, நாட்டுப்புற குழு நடனம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில் சுமார் 300 மாணவர்கள் கலந்து கொண்டனர்.பேசுவது தமிழா போட்டியில், முதல் பரிசை, ஐடிஐ வித்யா மந்தீர் மாணவர் பி.முகேஷ் பெற்றார். இரண்டாவது பரிசை மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மாணவி ஷர்மிளாவும், மூன்றவது பரிசை எஸ்விசிகே பள்ளியின் மாணவி நிவேதிதா பெற்றனர்.
குழு நடனப்போட்டியில், முதல் பரிசை, க்ளூனி கான்வென்ட் பள்ளியும், இரண்டாவது பரிசை வேல்ஸ் குளோபள் பள்ளியும், மூன்றவது பரிசை ஆர்பிஏஎன்எம்எஸ் பள்ளியும் பெற்றது.பாட்டுபாடவா போட்டியில் முதல் பரிசை, ஹொரமாவு வேல்ஸ் குளோபள் பள்ளியும், இரண்டாவது பரிசை மெத்தடிஸ்ட் மிஷன் பள்ளியும், கிளெவெல்லேண்ட் டவுன் பிபிஎம்பி பள்ளியும் பெற்றது.
வெற்றி பெற்ற மாணவர்களை தனஞ்செயன் என்கிற வெற்றிச் செல்வன், ஓளிமலரவன், வாழ்த்துரை வழங்கினர். இலட்சுமிபதி அவர்கள் மாணவர்களை பாராட்டி, பரிசுகளை வழங்கினார்.

தொடர்ந்து கலைச்சுடர் விருதாளர் ப.புருஷோத்தமன் தலைமையில் சன்மார்க வள்ளல் என்ற தலைப்பில் வில்லிசை அரங்கமும், இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவுவது புத்தகங்களே, அலைபேசிகளே என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
பட்டிமன்றத்திற்கு செ.வ.இராமநுசன் நடுவராக இருந்தார். புத்தகங்களே என்ற அணியில், வெ.தமிழ்ச்செல்வன், இர.தேன்மொழி, ச.துளசி ஆகியோரும், அலைபேசிகள் என்ற அணியில் தேன்மொழியன், கி.சுபாஷினி, சுவேரியா தகசீன் ஆகியோரும் வாதிட்டனர்.
இரு அணிகளின் வாதத்திற்கு பிறகு இறுதியில் இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவுவது புத்தகங்களே என்ற தீர்ப்பை நடுவர் செ.வ.இராமநுசன் வழங்கினார்.















