இரவு விருந்தளித்த பிரதமர் மோடி

புதுடெல்லி: டிசம்பர் 12-
தேசிய ஜனநாயக கூட்​டணி (என்​டிஏ) கட்​சிகளைச் சேர்ந்த நாடாளு​மன்ற உறுப்​பினர்​களுக்கு (எம்​பி) பிரதமர் நரேந்​திர மோடி நேற்று தனது இல்​லத்​தில் இரவு விருந்து அளித்​தார்.
டெல்லியில் எண் 7, லோக் கல்​யாண் மார்க்​கில் உள்ள பிரதமர் மோடி​யின் இல்​லத்​தில் விருந்துக்கு
ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பிஹாரில் நடை​பெற்ற தேர்​தலில் என்​டிஏ கூட்​டணி அமோக வெற்றி பெற்​றதைக் கொண்​டாடும் வித​மாக இந்த விருந்து நடை​பெற்​றது.
பொறுப்புணர்வுடன் மக்களுக்கு பணியாற்றுமாறு விருந்தில் பங்கேற்ற எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார்.
243 உறுப்​பினர்​களைக் காண்ட பிஹார் சட்​டப்​பேர​வை​யில் என்​டிஏ கூட்​டணி 202 இடங்​களை கைப்​பற்றி வெற்றி பெற்​றது.