துபாயில் இருந்து சென்னை புறப்பட்ட விமானத்தில் கோளாறு

துபாய்: டிசம்பர் 13-
துபாயில் இருந்து சென்னை புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
துபாயில் இருந்து சென்னைக்கு பயணிகள் 172 பேருடன் ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதை அறிந்த விமானி துபாய் விமான நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். பின்னர் விமானம் தரையிறக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.பின்னர் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் கோளாறை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப நிபுணர்கள் ஈடுபட்டு இருக்கின்றனர். இதனால் பயணிகள் 172 பேர் கடும் அவதி அடைந்தனர். பயணிகள் அனைவருக்கும் மாற்று ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது என ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.