நாட்டிலேயே அதிக வளர்ச்சி முதலிடம் பிடித்த தமிழ்நாடு

டெல்லி, டிச. 13- 2024-2025 ஆம் ஆண்டில் நாட்டிலேயே அதிக வளர்ச்சி கொண்ட மாநிலங்களின் பட்டியலில் முதல் இடத்தை தமிழ்நாடு பிடித்துள்ளது. மதிப்பு அடிப்படையில் 16 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி விகிதத்துடன் தமிழ்நாடு அதிக வளர்ச்சியை பதிவுசெய்துள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. 2024-25 ஆம் ஆண்டில் மாநிலங்களுக்கான ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் பற்றிய கைடு ஒன்றை மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலின் படி, மகாராஷ்டிராவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 45 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில், நாட்டிலேயே முதல் மாநிலமாக மகாராஷ்டிரா இடம் பெற்றுள்ளது.
)தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 31 லட்சத்து 18 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த நிதி ஆண்டில் 26 லட்சத்து 88 ஆயிரம் கோடியாக இருந்தது. அதேவேளையில்,
2024-25 ஆம் ஆண்டில் பணவீக்கத்தை கணக்கில் கொள்ளாமல் மதிப்பிடப்படும் மதிப்பு அடிப்படையிலான வளர்ச்சியில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. அதாவது,
16 விழுக்காடு வளர்ச்சியை பெற்று நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. அதேபோல, பீகார், உத்தரபிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் இரட்டை இலக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.