மத்திய அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு அரியர் தொகை கிடைக்கும்?

டெல்லி, டிச. 16-மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது ஏழாவது சம்பள கமிஷன் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுகிறது. வரும் ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து 8ஆவது சம்பள கமிஷன் அடிப்படையில் தான் சம்பளம் வழங்கப்பட வேண்டும் . ஆனால் தற்போது தான் மத்திய அரசு எட்டாவது சம்பள கமிஷனையே அமைத்திருக்கிறது . எனவே புதிய சம்பளம் வருவதற்கு இன்னும் இரண்டு ஆண்டு காலம் தேவைப்படும் . 2028 ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து தான் புதிய சம்பளம் வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய சூழலில் இந்த இரண்டு ஆண்டு காலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு பழைய சம்பளமும் வழக்கம் போல ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலை படியும் உயர்த்தி வழங்கப்படும் . தவறி போன இந்த இரண்டு ஆண்டுகளுக்கான சம்பளத் தொகையை மத்திய அரசு அரியர் தொகையாக கணக்கிட்டு அரசு ஊழியர்களுக்கு வழங்கிவிடும். எனவே சம்பள கமிஷன் தாமதமாகிறது என்பதை பற்றி ஊழியர்களோ ஓய்வூதியதாரர்களும் கவலை கொள்ள தேவை இல்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. எத்தனை மாதங்கள் தாமதம் ஆகிறதோ அத்தனை மாதத்திற்குமான வழங்க வேண்டிய சம்பளம் கணக்கீடு செய்யப்பட்டு முறையாக ஊழியர்களுக்கு அரியர் தொகையாக வழங்கிவிடுவார்கள். அப்படி பார்க்கும்போது அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு பணம் அரியர் தொகையாக கிடைக்கப் போகிறது என்பதை தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம். சம்பள கமிஷன் ஃபிட்மன்ட் ஃபேக்டரை அடிப்படையாகக் கொண்டுதான் அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை உயர்த்துவதற்கான கணக்கிட்டையே மேற்கொள்கிறது . இந்த முறை ஃபிட்மண்ட் ஃபேக்டரை 2.0 என கணக்கீடு செய்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது . அப்படி என்றால் சம்பளம் தற்போது இருப்பதை விட இரண்டு மடங்காக உயரும் என அர்த்தம். ஒரு அரசு ஊழியர் அடிப்படை சம்பளமாக 76 ,500 ரூபாய் வாங்குகிறார், அத்துடன் அவருக்கு அகவிலைப்படி மற்றும் பிற கொடுப்பனவுகள் 44,370 ரூபாயாக கிடைக்கிறது, வீட்டு வாடகை அல்ப்வென்ஸாக 22 ,950 ரூபாய் கிடைக்கிறது என்றால் மொத்தமாக அவர் கைக்கு கிடைக்கும் தொகை 1,43, ரூபாய் ஆகும்.