மனு ஸ்மிருதியை சுட்டிக்காட்டி உத்தரவு பிறப்பித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்

மதுரை: டிசம்பர் 17-
மனு ஸ்மிருதியை மேற்கோள் காட்டி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. “தனது குடிமக்களை பாதுகாப்பதே ஒரு அரசனின் உயரிய கடமை என மனு ஸ்மிருதி வரையறுத்துள்ளது” எனக் குறிப்பிட்டு மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்,
வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள், நிறுவனங்களிடம் இருந்து இழப்பீடு பெறுவதற்கு சட்ட உதவிகளை வழங்குவதற்கான கொள்கையை மத்திய அரசு வகுக்க வேண்டும் என பிறப்பித்த உத்தரவில் உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில் கௌடில்யர், தனது குடிமக்களின் மகிழ்ச்சியிலேயே மன்னனின் மகிழ்ச்சி அடங்கியுள்ளது என்றும், அவர்களின் நலனிலேயே மன்னனின் நலன் உள்ளது என்றும் கூறுகிறார். தனது குடிமக்களுக்கு எது மகிழ்ச்சி அளிக்கிறதோ, அதையே மன்னன் நல்லதாகக் கருத வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், ஒரு மன்னனின் மிக உயர்ந்த கடமை தனது குடிமக்களைப் பாதுகாப்பதே என்று மனு கூறுகிறார். நிர்ணயிக்கப்பட்ட வரிகளை தனது குடிமக்களிடமிருந்து பெற்று அவர்களைப் பாதுகாக்கும் மன்னன் மட்டுமே தர்மத்தின்படி செயல்படுகிறான். நாம் ‘மன்னன்’ என்ற சொல்லுக்குப் பதிலாக ‘அரசாங்கம்’ என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார். சமீபகாலமாக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். திருப்பரங்​குன்​றம் மலையில் தீபம் ஏற்றும் விவ​காரம் தொடர்​பாக திமுக, காங்​கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகளை சேர்ந்த எம்​பிக்​கள் கடந்த 9 ஆம் தேதி மக்​கள​வைத் தலை​வர் ஓம் பிர்​லாவை சந்​தித்​தனர். அப்​போது சென்னை உயர் நீதி​மன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதனை பதவி நீக்​கம் செய்ய வேண்​டும் என்று இயற்றப்​பட்ட தீர்​மான நோட்​டீஸை அவரிடம் வழங்​கினர். இந்த நோட்​டீஸில் 120 எம்​பிக்​கள் கையெழுத்​திட்டு உள்​ளனர்.