தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி

லக்னோ, டிச. 17- இந்தி​யா – தென் ஆப்​பிரிக்கா அணி​கள் இடையி​லான 4-வது டி 20 கிரிக்​கெட் போட்டி லக்​னோ​வில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்​பாய் ஏகானா மைதானத்​தில் இன்று இரவு 7 மணிக்கு நடை​பெறுகிறது. இரு அணி​கள் இடையி​லான 5 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 தொடரில் கட்​டாக்​கில் நடை​பெற்ற முதல் ஆட்​டத்​தில் இந்​திய அணி 101 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. தொடர்ந்து முலான்​பூரில் நடை​பெற்ற 2-வது ஆட்​டத்​தில் தென் ஆப்​பிரிக்க அணி 51 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. இதன் பின்​னர் தரம்​சாலா​வில் நடை​பெற்ற 3-வது ஆட்​டத்​தில் இந்​திய அணி 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. இதன் மூலம் தொடரில் இந்​திய அணி 2-1 என்ற கணக்கில் முன்​னிலை வகிக்​கிறது. இந்​நிலை​யில் 4-வது ஆட்​டம் லக்​னோ​வில் இன்று நடை​பெறுகிறது. இந்த ஆட்​டத்​தில் இந்​திய அணி வெற்றி பெறும் பட்​சத்​தில் தொடரை கைப்​பற்​றும். கடந்த ஆட்​டத்​தில் இந்​திய அணி​யின் ஒட்டுமொத்த பந்​து​வீச்சு துறை​யும் சிறப்​பாக செயல்​பட்டு இருந்தது.