4 போட்டியில் விளையாட போகும் வீரருக்கு ரூ.8.6 கோடியா?

மும்பை, டிச. 19- ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஜாஸ் இங்கிலீஷ்- ஐ லக்னோ அணி கோடியே 60 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. இது பஞ்சாப் அணியை கோபப்படுத்தி இருக்கிறது. வீரர்கள் தக்க வைக்கப்படும் கெடு முடிவதற்கு முன்பு தமக்கு திருமணம் ஆகப்போவதாக கூறினார். இதனால் முழு தொடரிலும் தம்மால் விளையாட முடியாது என்றும் பஞ்சாப் அணியிடம் ஜாஸ் இங்கிலீஷ் கூறியிருந்தார்.இதன் காரணமாக அவர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட இந்த சூழலில் தற்போது ஏலத்தில் மீண்டும் இடம் பிடித்த ஜோஸ் இங்கிலீஷ், 8 கோடியே 60 லட்சம் ரூபாய்க்கு லக்னோ அணியால் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். இதனால் ஜோஸ் இங்கிலீஷ் ஏமாற்றினாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் தமக்கு திருமணம் ஆகப்போவது உறுதி தான் என்றும் நான்கு போட்டிகளுக்கு மேல் தம்மால் விளையாட முடியாது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டிவில்லியர்ஸ், ஜோஸ் இங்கிலீஷை ஐபிஎல் அணிகள் ஏலம் எடுத்த விதம் நான் பார்த்ததிலே மிகவும் விசித்திரமான ஒரு விஷயமாக கருதுகிறேன்.
ஏனென்றால் அடுத்த சீசனில் வெறும் நான்கு போட்டிகளில் மட்டும்தான் விளையாட போகிறேன் என்று அவர் தெரிவித்துவிட்டார். ஆனால் லக்னோ அணி, அவரை எட்டு கோடியே 60 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறது. எனக்கு புரியவே இல்லை. உண்மையிலேயே அவ்வளவு தொகைக்கு ஏற்ற வீரர் தான் ஜோஸ் இங்கிலீஷ். ஆனால் கான்வே போன்ற வீரர்கள் இம்முறை ஏலம் போகவில்லை. இந்த வீரர்கள் எல்லாம் முழு தொடரிலும் விளையாட கூடியவர்கள். ஜோஸ் இங்கிலீஷ்க்கு பதிலாக முழு தொடரின் விளையாடும் வீரர்களை லக்னோ தேர்வு செய்திருந்தால், அது சிறப்பான விஷயம் ஆகும். கடந்த ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் 11 போட்டிகளில் விளையாடிய ஜோஸ் இங்கிலீஷ் 278 ரன்கள் அடித்திருந்தார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 162 என்ற நிலையில் இருந்தது. ஜோஸ் இங்கிலீஷ் அபாரமாக விளையாடியதன் காரணமாக பஞ்சாப் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதேபோன்று சிஎஸ்கே அணி குறித்து பேசிய டிவில்லியர்ஸ், சிஎஸ்கே அணி இளம் வீரர்களைக் கொண்டு அணியை கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கின்றது. இது உண்மையிலே நல்ல விஷயம். தோனி விலகி செல்லும்போது, கார்த்திக் சர்மா அணிக்குள் எப்போது வேண்டுமானாலும் வரலாம். இதைப் போன்று சஞ்சு சாம்சன் அணியில் இருக்கின்றார். கடந்த சீசன் நடுவிலே உர்வில் பட்டேல், பிரவீஸ், ஆயுஸ் மாத்ரே போன்ற வீரர்களை தேர்வு செய்து தங்களுடைய எதிர்காலத்தை வைத்து செயல்பட்டு இருக்கிறார்கள் என்று டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.