
அகமதாபாத், டிச. 20- தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 3-1 கணக்கில் கைப்பற்றியது. இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. மொத்தம் 5 போட்டிகளை கொண்ட இந்த தொடரில், இரண்டு போட்டிகளில் இந்திய அணியும், ஒரு போட்டியில் தென்னாப்பிரிக்க அணியும் வெற்றி பெற்று இருந்தன. கடும் பனி காரணமாக நான்காவது போட்டி கைவிடப்பட்டது. இந்நிலையில் இன்றைய கடைசி 5வது போட்டியில், 2-1 என்ற கணக்கில் இரு அணிகளும் மோதின. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 37 (22), அபிஷேக் சர்மா 34 (21), திலக் வர்மா 73 (42), ஹர்திக் பாண்டியா 63 (25) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்கா அணி 232 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கியது. குயின்டன் டி காக் 65 (35), ரீசா ஹென்ட்ரிக்ஸ் 13 (12), டெவால்ட் ப்ரீவிஸ் 31 (17), டேவிட் மில்லர் 18 (14) ஆகியோர் இலக்கை அடைய போராடி விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அடுத்து வந்தவர்கள் தடுமாற, 20 ஓவர் மனுவில் தென்னாப்பிரிக்கா அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்திய அணி இந்த டி20 தொடரை 3-1 கணக்கில் வென்றது.


















