
புது டெல்லி: டிசம்பர் 20-
இந்தியாவில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தக்கூடிய மிக முக்கியமான ஒரு பொது போக்குவரத்து ரயில்கள். ஒரு காலத்தில் ரயிலில் பயணம் செய்ய வேண்டும் என்றால் முன்கூட்டியே சென்று ரயில் நிலையத்தில் காத்திருந்து டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். ஆனால் இப்போது நிலைமை வெகுவாக மாறிவிட்டது. செல்போனில் ஐஆர்சிடிசி , யுடிஎஸ் போன்ற செயலிகள் வாயிலாகவே நாம் எளிமையாக ரயில் பயணங்களுக்கான டிக்கெட்டை வாங்கி கொள்ளலாம். எனவே நாம் கையில் கைகளில் டிக்கெட்டை கொண்டு செல்ல வேண்டிய தேவையும் இல்லை . செல்போனில் டிக்கெட்டின் டிக்கெட்டை காட்டினாலே போதும் .ஆனால் சில தினங்களுக்கு முன்னர் இந்திய ரயில்வே ரயில் பயணிகள் டிக்கெட்டை கட்டாயம் கையில் வைத்திருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக ஒரு தகவல் பரவியதுகுறிப்பாக அன்ரிசர்வ்டு டிக்கெட் அதாவது முன்பதிவில்லாத டிக்கெட் வைத்திருக்கக் கூடிய பயணிகள் கட்டாயம் கைகளில் அச்சிடப்பட்ட டிக்கெட்டை கொண்டு இருக்க வேண்டும் என சில ஊடகங்களில் செய்தி வெளியானது. இதனை போனில் அன்ரிசர்வ்டு டிக்கெட் காட்டினால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும், கண்டிப்பாக அச்சிடப்பட்ட டிக்கெட்டை கொண்டிருக்க வேண்டும் என்றும் செய்திகள் வெளியாகின. ் இந்திய ரயில்வே புதிய விதியை அறிமுகம் செய்துள்ளது என்றும் மொபைல் போனில் காட்டப்படும் முன்பதிவு செய்யப்படாத (Unreserved) டிக்கெட்டுகள் மட்டும் இனி ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. இதன்படி பயணிகள் அன்ரிசர்வ்டு டிக்கெட்களை ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் என எந்த முறையில் பதிவு செய்திருந்தாலும் அதனை பிரிண்ட் அவுட்டாக எடுத்திருந்தால் அதனை பிரிண்ட் அவுட் முறையில் காட்டலாம். டிக்கெட்டை டிஜிட்டல் முறையில் பெற்றிருந்தால், பிரிண்ட் அவுட் எடுக்க வேண்டிய தேவை இல்லை என கூறப்பட்டிருக்கிறது. டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்ட அந்த மொபைல் போனிலேயே டிக்கெட்டை டிஜிட்டல் முறையில் காண்பிக்கலாம் என கூறி இருக்கிறது. இது டிக்கெட்டை சரி பார்ப்பதற்கு மட்டுமே தேவை என்றும் தெளிவுபடுத்தி இருக்கிறது. அன்ரிசவ்ர்டு டிக்கெட் வைத்திருக்கக்கூடிய பயணிகள் கட்டாயம் அதனை பிரிண்டட் முறையில் கொண்டு வர வேண்டும் என எந்த ஒரு புதிய உத்தரவையும் ரயில்வே பிறப்பிக்கவில்லை என்றும் ஏற்கனவே இருக்கக்கூடிய நடைமுறைதான் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கிறது
என்றும் விளக்கம் தந்து இருக்கிறது















