
கடலுார்: டிசம்பர் 20-
கடலுார் அடுத்த மலையடிக்குப்பததில் காலணி தொழிற்சாலை அமைப்பதற்காக நிலங்களை கையகபடுத்தும் விவகாரத்தில், விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் ரவீந்திரன், மா.கம்யூ., மாவட்டசெயலாளர் மாதவன், மாநிலக்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், துணைத்தலைவர் தட்சிணாமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் கலெக்டரிடம் நேரில் அளித்த மனு விபரம்
கடலுார் தாலுகா, கொடுக்கன்பாளையம் ஊராட்சியில் தோல் அல்லாத காலணி தொழிற்சாலை அமைப்பதற்காக விளை நிலத்தை கையகப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஏற்கனவே விவசாயிகள் அரும்பாடுபட்டு வளர்த்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முந்திரி மரங்களை அழித்ததற்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் போராடி வருகின்றனர்.விவசாயிகள் உருவாக்கிய நிலங்களை அவர்களுக்கு சொந்தமாக்க நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை முடியும் வரையில் வருவாய் துறையினர் பெத்தாங்குப்பம், மலையடிக்குப்பம், கீரப்பாளையம கிராமங்களில் நிலத்தை கையகபடுத்தும் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.















