2028க்குள் ‘ஏர் டாக்சி’ சேவை; தனியார் நிறுவனம் அறிவிப்பு

மும்பை: டிசம்பர் 23-
நம் நாட்டில் விரைவில், எலக்ட்ரிக் விமான டாக்ஸி சேவைகள் துவங்கவுள்ளன. அதற்கான கள சோதனைகள் நடந்து வருவதாக விண்வெளித் துறை சார்ந்த, ‘ஸ்டார்ட்அப்’ நிறுவனமான, ‘சரளா ஏவியேஷன்’ அறிவித்துள்ளது.
இருசக்கர வாகனங்களை போல, வருங்காலத்தில் வான் வழியே பயணிக்கும், ‘ஏர் டாக்சி’ சேவைகளை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சியில், சர்வதேச நிறுவனங்கள் களமிறங்கி இருக்கின்றன.
அந்நிறுவனங்களுடன் போட்டி போடும் வகையில், கர்நாடகாவின் பெங்களூருவை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான, ‘சரளா ஏவியேஷன்’ ‘எலக்ட்ரிக் ஏர் டாக்சி’களை வடிவமைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறது.
வரும், 2028க்குள் அதை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஜனவரியில், டில்லியில் நடந்த கண்காட்சியின் போது, ‘சூன்யா’ என்ற ஏர் டாக்ஸி மாடலை இந்நிறுவனம் அறிமுகம் செய்தது.