வங்கதேச தூதரகங்கள் முன்பு போராட்டம்

புதுடெல்லி: டிசம்பர் 24-
டெல்​லி, மும்பை, கொல்​கத்​தா, குவாஹாட்​டி, அகர்​தலா, சிலிகுரி​யில் உள்ள வங்​கதேச தூதரகங்​கள் முன்பு நேற்று போராட்​டங்​கள் நடை​பெற்​றன. டெல்​லி​யில் ஏராள​மானோர் திரண்​டு, போலீஸ் தடுப்​பு​களை உடைத்து முன்​னேறிய​தால் பதற்​றம் ஏற்​பட்​டது.
கடந்த 2024-ம் ஆண்​டில் வங்​கதேசத்​தில் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்​டது. அப்​போது பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஹேக் ஹசீனா இந்​தி​யா​வில் தஞ்சம் அடைந்​தார். அவரை ஒப்படைக்க வேண்டுமென்று மத்திய அரசிடம் வங்கதேச இடைக்கால அரசு வலியுறுத்தி வருகிறது. எனினும் ஷேக் ஹசீனாவை வங்கதேசத்திடம் ஒப்படைப்பது குறித்து மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை.
தற்​போது வங்​கதேசத்​தில் முகமது யூனுஸ் தலை​மையி​லான இடைக்​கால அரசு ஆட்சி நடத்தி வரு​கிறது. அந்த நாட்​டில் அடுத்த ஆண்டு பிப்​ர​வரி 12-ம் தேதி பொதுத்​தேர்​தல் நடத்​தப்பட உள்​ளது. இந்த தேர்​தலில் பல்​வேறு மாணவர் சங்​கங்​கள் உரு​வாக்​கிய தேசிய மக்​கள் கட்​சி,
வங்​கதேச தேசிய கட்​சி, வங்​கதேச ஜமாத் இ இஸ்​லாமி உள்​ளிட்ட பிர​தான கட்​சிகள் போட்​டி​யிடு​கின்​றன. முன்​னாள் பிரதமர் ஷேக் ஹசீ​னா​வின் அவாமி லீக் தேர்தலில் போட்​டி​யிட தடை விதிக்​கப்​பட்டு உள்​ளது. இந்த சூழலில் இன்​கிலாப் மஞ்சா என்ற மாணவர் போராட்ட குழு​வின் மூத்த தலை​வரும், டாக்கா 8 தொகு​தி​யின் வேட்​பாள​ரு​மான ஷெரீப் உஸ்​மான் ஹாடி அண்​மை​யில் மர்ம நபரால் சுட்​டுக் கொல்​லப்​பட்​டார். அவரை சுட்​ட​தாக சந்​தேகிக்​கப்​படும் பைசல் கரீம் இந்​தி​யா​வில் பதுங்கி இருப்​ப​தாக வங்​கதேச சமூக வலை​தளங்​களில் தகவல்​கள் பரப்​பப்​பட்​டன.
இதன்​ காரணமாக வங்​கதேசத்​தில் வாழும் சிறுபான்மை இந்​துக்​கள் மீது கொடூர தாக்​குதல்​கள் நடத்​தப்​பட்டு வருகின்​றன. கடந்த 18-ம் தேதி மைமன்​ சிங் மாவட்​டம், பலுகா பகு​தியை சேர்ந்த தீபு சந்​திர தாஸ் (30) அடித்​துக் கொலை செய்யப்​பட்​டார்.
இதைக் கண்​டித்து இந்​தி​யா​வில் செயல்​படும் வங்​கதேச தூதரகங்​கள் முன்பு விஎச்பி உள்​ளிட்ட இந்து அமைப்​பு​கள் கடந்த சில நாட்​களாக போராட்​டங்​களை நடத்தி வரு​கின்​றன. இதன்​ காரண​மாக டெல்​லி, மும்பை, கொல்​கத்​தா, குவாஹாட்​டி, அகர்​தலா, சிலிகுரி ஆகிய நகரங்​களில் உள்ள வங்​கதேச தூதரகங்​கள் தற்​காலிக​மாக மூடப்​பட்டு உள்​ளன.