
குவாலியர், டிச. 26- மத்திய பிரதேசத்தில், போலி திருமண தகவல் மையம் நடத்தி 1,500 இளைஞர்களை ஏமாற்றிய, 20 பெண்கள் கைது செய்யப்பட்டனர். மத்திய பிரதேச மாநிலம், குவாலியரில் போலி திருமண இணையதளம் மற்றும் தகவல் மையத்தை பெண்கள் உட்பட பெரிய கும்பல் நடத்தி வந்தது நம்பிக்கை இதை அறியாமல், மணமகள் தேடி விண்ணப்பிக்கும் ஆண்களிடம், இந்நி றுவனம் இணையத்தில் கிடைக்கும் அழகா ன பெண்களின் புகைப் படங்களை வழங்கியுள்ளது. அதன் பின், அவர்களை போலி அழைப்பு மையத்தில் இருந்து தொடர்புகொண்ட பெண்கள், வருங்கால மனைவியை போல் பேசியுள்ளனர். மணப் பெண் தேடும் இளைஞர்களின் நம்பிக்கையை பெற்ற உடன் பதிவுக் கட்டணம், சரிபார்ப்பு கட்டணம், திருமண செலவு போன்ற பெயர்களில் பணம் கேட்டுள்ளனர். அதை நம்பி இளைஞர்கள் பணம் அனுப்பியதும், அவருடன் பேசி வந்த பெண்ணின் தொடர்பு எண் ஸ்விட்ச் ஆப் ஆகியுள்ளது. இது தொடர்பாக, பல இளைஞர்கள் போலீசில் புகாரளித்தனர். குவாலியர் போலீசார் நடத்திய விசாரணையில், மயூர் நகர் மற்றும் ஜோதி நகர் ஆகிய இரு இடங்களில் போலி திருமண தகவல் மையங்கள் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டன. இரு இடங்களில் இருந்தும் 20 பெண்கள் கைது செய்யப்பட்டனர். ராகி கவுர், ஷீத்தல் ஆகியோர் இந்த அழைப்பு மையங்க ளை நடத்தி வந்தனர். பறிமுதல்இ ந்த குற்றத்துக்கு மூளையாக திலேஷ்வர் என்பவர் செயல்பட்டது தெரியவந்தது. அவரை தேடும் பணி நடந்து வருகிறது. போலி அழைப்பு மையங்களில் இருந்து கணினிகள், மொபைல் போன்கள், சிம் கார்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. வங்கி கணக்குகளில் 1.5 கோடி ரூபாய் அளவுக்கு பரிவர்த்தனை நடந்தது தெரியவந்துள்ளது. 1,500க்கும் மேற்பட்டோர் இந்த மோசடியால் பாதிக்கப்பட்டதாக போலீசார் கூறினர்.
















