
புதுடில்லி: ஜனவரி 6-
தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய நான்கு மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள சட்டசபைகளின் பதவிக்காலம், வரும் மே மற்றும் ஜூன் மாதங்களில் வெவ்வேறு தேதிகளில் நிறைவடைகிறது.
இதையடுத்து,
தமிழகம், மேற்கு வங்கம், கேரளா மற்றும் புதுச்சேரியில், வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ளது.
இதேபோல், அசாமில் வாக்காளர் பட்டியல்களின் தனி சிறப்பு திருத்தப் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், துணை தேர்தல் கமிஷனர் மனிஷ் கார்க் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகியவற்றின் தலைமை தேர்தல் அதிகாரிகள், தேர்தல் மேலாண்மை பிரிவை கவனிக்கும் தேர்தல் கமிஷன் அதிகாரிகளுடன், சட்டசபை தேர்தல் ஆயத்த
பணிகள் குறித்து விவாதித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில், மத்திய ஆயுதப்படை போலீசார் மற்றும் ஓட்டுப்பதிவு பணியாளர்களின் தேவை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது.















