
புதுடெல்லி, ஜன. 8- ஐஏஎஸ் வந்தனா திரிபாதி, தனது வீட்டை வாடகைக்கு விட்டிருந்த வேளையில் அங்கு அடிக்கடி இளம் ஆண்கள் வந்து போவதாகவும், விபச்சாரம் நடப்பதாகவும் உள்ளூர் மக்கள் போலீசிடம் கூறினார்கள்.இதன்பேரில் உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ்ஜில் உள்ள கைட்கஞ்ச் பகுதியில், போலீசார் திடீரென சோதனை சோதனை நடத்தினர், அப்போது 4 இளம் பெண்களையும் மற்றும் 5 இளைஞர்களையும் ஆட்சேபனைக்குரிய சூழ்நிலையில் கைது செய்திருக்கிறார்கள். எப்படி இந்த கும்பல் சிக்கியது என்பதை பார்ப்போம். உத்தரப்பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் (பழைய அயோத்தி) நியூ பஸ்தி கிட்கஞ்ச் பகுதியில் ஐஏஎஸ் அதிகாரி வந்தனா திரிபாதி என்பவருக்கு சொந்தமாக இரண்டு அடுக்கு வீடு இருககிறது.
இந்த வீட்டை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சர்வேஷ் திவேதி என்பவர் மாதம் 15,000 ரூபாய் வாடகைக்கு எடுத்திருக்கிறார். இவர் தனது குடும்பத்துடன் தங்குவதாகக் கூறி வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். அங்கு சட்டவிரோதமாக விபச்சார தொழிலை எந்த சந்தேகமும் வராத அளவிற்கு நடத்தி வந்திருக்கிறார்.
கடந்த சில மாதங்களாக அந்த வீட்டிற்கு இரவு நேரங்களில் இளம்பெண்களும், இளைஞர்களும் அடிக்கடி வந்து செல்வதை கவனித்த அக்கம்பக்கத்தினர், சந்தேகமடைந்து விபச்சாரம் நடப்பதாக குற்றச்சாட்டி கிட்கஞ்ச் போலீசாருக்குத் தகவல் அளித்தனர்.
கதவை உடைத்த போலீசார் தகவலின் பேரில் பிரயாக்ராஜ் நகர ஏசிபி ராஜீவ் யாதவ் மற்றும் ஆய்வாளர் வீரேந்திர சிங் தலைமையிலான போலீசார் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பிற்பகலில் அந்த வீட்டைச் சூழ்ந்தார்கள். போலீசாரைப் பார்த்ததும் உள்ளே இருந்தவர்கள் கதவை பூட்டிக்கொண்டு திறக்க மறுத்துவிட்டார்கள். இதையடுத்து போலீசார் கதவை உடைத்து உள்ளே அதிரடியாகப் புகுந்தனர். வீட்டிற்குள் வெவ்வேறு அறைகளில் இளம்பெண்களும், இளைஞர்களும் முகம் சுளிக்கும் வகையில் ஆபாசமான நிலையில் இருந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அங்கிருந்து ஏராளமான காண்டம் மற்றும் அரைகுறை ஆடைகள் மற்றும் தடயங்களை போலீசார் கைப்பற்றினர்.















