அடுத்து இந்த நாடுதான்.. குண்டு வீசி தாக்க போகிறோம்.. உறுதியாக அறிவித்த டிரம்ப்

நியூயார்க்: ஜனவரி 9-
போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு எதிரான சண்டையில் அமெரிக்கா இனி நேரடியாக குண்டு வீசி தாக்கத் தொடங்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்து உள்ளார். மெக்சிகோ மீது தாக்குதல் நடத்த போவதாக அவர் கூறி உள்ளார். மெக்சிகோவை இக்கும்பல்கள் கட்டுப்படுத்துவதாகவும், அமெரிக்காவில் ஆண்டுதோறும் 2.5 லட்சம் முதல் 3 லட்சம் பேர் போதைப்பொருளால் உயிரிழப்பதாகவும் அவர் கூறினார்.
இதுவரை போதை பொருள் கடத்தல் கும்பல்கள் நேரடியாக ஆபரேஷன்கள் மூலம் கைது செய்யப்பட்டு உள்ளன. பொருளாதார ரீதியாக முடக்கப்பட்டு உள்ளன. தீவிரவாத அமைப்புகள் போல குண்டு வீசி எல்லாம் தாக்கப்படவில்லை. ஆனால் இனி மெக்சிகோவில் உள்ள போதை பொருள் அமைப்புகள் தீவிரவாத அமைப்புகளாக கருதப்பட்டு குண்டுவீசி தாக்கப்படும் என்று டிரம்ப் கூறி உள்ளார். டிரம்ப்பின் இந்த கருத்துப்படி பார்த்தால் டிரம்ப் மெக்சிகோ மீது நேரடியாக குண்டு வீசி இனி தாக்குதல்களை நடத்துவார்.
மெக்சிகோவிற்குள் ராணுவ நடவடிக்கை போரை தூண்டும் ஆபத்தை ஏற்படுத்தலாம். அதேபோல் போதை பொருள் விற்பனை காரணமாக.. கொலம்பியா மீது அமெரிக்க ராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம் என அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி உள்ளார். இந்த அறிவிப்பால் லத்தீன் அமெரிக்காவில் பதற்றம் அதிகரித்துள்ளது.வெனிசுவேலாவில் நடந்த ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கொலம்பியா குறித்து கடும் எச்சரிக்கை விடுத்தார். “கோகைன் தயாரிப்பதையும், அதை அமெரிக்காவிற்கு விற்பனை செய்வதையும் விரும்பும் ஒரு மோசமான நபரின் மூலம் லத்தீன் அமெரிக்க நாடான கொலம்பியா நடத்தப்படுகிறது” எனக் குற்றம்சாட்டினார். கொலம்பியா மீது அட்டாக் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், கொலம்பியாவின் தலைமையை, குறிப்பாக அதிபர் குஸ்டாவோ பெட்ரோவை கடுமையாக விமர்சித்தார். “கொலம்பியாவும் மிகவும் பாழ்பட்டிருக்கிறது. கோகைன் தயாரித்து அமெரிக்காவிற்கு விற்பனை செய்ய விரும்பும் ஒரு தீயவரால் அது நடத்தப்படுகிறது. இது நீண்ட காலம் நீடிக்காது” என்றார். கொலம்பியாவுக்கு எதிராக அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுக்குமா என்று நேரடியாகக் கேட்கப்பட்டபோது, டிரம்ப், “அது எனக்கு நல்லதாகவே தோன்றுகிறது..
அதனால் அதை செய்யலாம்” என்று பதிலளித்தது குறிப்பிடத்தக்கது. இதனால் பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.சரமாரி அட்டாக் சனி அதிகாலையில் துரிதமாக நடந்த தாக்குதலில் மதுரோவும் மனைவி சிலியா ஃப்ளோரஸும் அமெரிக்கப் படைகளால் கைதுசெய்யப்பட்டனர். அவர்களின் பெட்ரூமில் ராணுவம் புகுந்து கைது செய்தது. காரகாஸ்வாசிகள், இந்த தாக்குதலின்போது வெடிச்சத்தங்களைக் கேட்டனர்; குறைந்தது ஏழு குண்டுகள் வெடித்து, ராணுவ இலக்குகளைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மதுரோ இல்லாத நிலையில் தற்காலிக ஜனாதிபதியான டெல்சி ரோட்ரிக்ஸ் அங்கே ஆட்சி நடத்தி வருகிறார். செய்தியாளர் சந்திப்பில் அவர், அமெரிக்க தாக்குதலால் பொதுமக்கள் மற்றும் ஆயுதப்படை உறுப்பினர்கள் உயிரிழந்ததாகக் குறிப்பிட்டாலும், எண்ணிக்கையைத் தெரிவிக்கவில்லை.