ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்: 3-வது சுற்றில் அல்கராஸ், சபலென்கா

மெல்பர்ன், ஜன. 22- ஆஸ்​திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் மெல்​பர்ன் நகரில் நடை​பெற்று வரு​கிறது.
இதன் 4-வது நாளான நேற்று ஆடவர் ஒற்​றையர் பிரிவு 2-வது சுற்​றில் முதல் நிலை வீர​ரான ஸ்பெ​யினின் கார்​லோஸ் அல்​க​ராஸ் 7-6 (7-4), 6-3, 6-2 என்ற செட் கணக்​கில் 102-ம் நிலை வீர​ரான ஜெர்​மனி​யின் யானிக் ஹான்ஃப்​மேனை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்​னேறி​னார்.
10-ம் நிலை வீர​ரான கஜகஸ்​தானின் அலெக்​சாண்​டர் பப்ளிக் 7-5, 6-4, 7-5 என்ற செட் கணக்​கில் 54-ம் நிலை வீரரான ஹங்​கேரி​யின் மார்​டன் ஃபுசோவிக்​ஸை​யும், 11-ம் நிலை வீர​ரான ரஷ்​யா​வின் டேனியல் மெத்​வ​தேவ் 6-7 (9-11), 6-3, 6-4, 6-2 என்ற செட் கணக்​கில் 83-ம் நிலை வீர​ரான பிரான்ஸின் குவென்​டின் ஹாலிஸை​யும், 13-ம் நிலை வீரரான ரஷ்​யா​வின் ஆந்த்ரே ரூப்​லெவ் 6-4, 6-3, 4-6, 7-5 என்ற செட் கணக்​கில் 151-ம் நிலை வீர​ரான போர்ச்​சுகலின் ஜெய்ம் ஃபரி​யா​வை​யும் வீழ்த்தி 3-வது சுற்​றில் நுழைந்தனர். 14-ம் நிலை வீர​ரான ஸ்பெ​யினின் அலெஜான்ட்ரோ டேவிடோ​விச் ஃபோகின் 6-3, 7-6 (7-3), 5-7, 4-6, 6-4 என்ற செட் கணக்​கில் 63-ம் நிலை வீர​ரான அமெரிக்​கா​வின் ரெய்லி ஓபெல்​காவை​யும், 18-ம் நிலை வீர​ரான அர்​ஜெண்​டி​னா​வின் பிரான்​சிஸ்கோ செருண்​டோலோ 6-3, 6-2, 6-1 என்ற செட் கணக்​கில் 66-ம் நிலை வீர​ரான போஸ்​னி​யா-ஹெர்​ சகோவின் டாமிர் ட்சும்​ஹூரை​யும், 19-ம்நிலை வீர​ரான அமெரிக்​கா​வின் டாமி பால் 6-3, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் 103-ம் நிலை வீர​ரான அர்​ஜெண்​டி​னா​வின் தியாகோ டிரண்​டேவை​யும் தோற்​கடித்து 3-வது சுற்​றுக்கு முன்​னேறினர்.
மகளிர் ஒற்​றையர் பிரிவு 2-வது சுற்​றில் முதல் நிலை வீராங்க​னை​யான பெலாரஸின் அரினா சபலென்கா 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்​கில் தகுதி நிலை வீராங்கனையான சீனா​வின் பா ஜூவோஸு​வானை​யும், 3-ம் நிலை வீராங்​க​னை​யான அமெரிக்​கா​வின் கோ கோ காஃப் 6-2, 6-2 என்ற செட் கணக்​கில் 69-ம் நிலை வீராங்கனை​யான செர்​பி​யா​வின் ஓல்கா டானிலோவிக்​கை​யும், 7-ம் நிலை வீராங்​க​னையான இத்​தாலி​யின் ஜாஸ்​மின் பவுலி 6-2, 6-3 என்ற செட் கணக்​கில் 57-ம் நிலை வீராங்க​னை​யான போலந்​தின் மாக்​டலீனா ஃப்​ரீச்​சை​யும் வீழ்த்தி 3-வது சுற்​றுக்கு முன்​னேறினர்.