ரூ.10 கோடி முதல் பரிசு.. யாருக்கு கொடுத்து வச்சிருக்கோ

திருவனந்தபுரம், ஜன. 29- கேரளாவில் கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் லாட்டரி குலுக்கல் முடிந்துள்ளது. இதில் முதல் பரிசு ரூ.20 கோடி பரிசு அடித்த நபர் யார் என்று இன்னமும் தெரியவில்லை. இந்நிலையில் அடுத்த பம்பர் லாட்டரியாக ரூ.10 கோடி முதல் பரிசாக கொண்ட “சம்மர் பம்பர் லாட்டரி” (Kerala Summer Bumper Lottery) விற்பனை தொடங்கியுள்ளது. ரூ.300 விலை கொண்ட இந்த லாட்டரி சீட்டுக்களில் மொத்தம் 1,81,513 பரிசுகள் வழங்கப்படுகின்றன. கேரளாவில் கடந்த 24 தேதி கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் லாட்டரி குலுக்கல் நடைபெற்றது. இந்த குலுக்கலில் XC 138455 என்ற எண்ணுக்கு முதல் பரிசாக ரூ.20 கோடி விழுந்தது. கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கஞ்சிரப்பள்ளியில் விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டிற்கு முதல் பரிசு விழுந்தது. கேரள சம்மர் பம்பர் லாட்டரி பரிசு விழுந்து ஐந்து நாட்கள் ஆகியும் இன்னும் வெற்றியாளர் யார் என்ற மர்மம் நீடிக்கிறது. 20 கோடி வென்ற அதிர்ஷ்டசாலி யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் கேரள சேட்டன்கள் ஆர்வத்துடன் வெற்றியாளர் விவரங்களை தெரிந்து கொள்ள காத்திருக்கிறார்கள். இது ஒருபக்கம் இருக்க கேரளாவில் அடுத்த பம்பர் லாட்டரியை மாநில அரசு அறிமுகம் செய்துள்ளது. சம்மர் பம்பர் லாட்டரி டிக்கெட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த டிக்கெட் ஒன்றின் விலை ரூ.300 ஆகும். முதல் பரிசாக ரூ.10 கோடி அளிக்கப்படுகிறது. இரண்டாவது பரிசாக ரூ.1 கோடி அளிக்கப்படுகிறது. மூன்றாவது பரிசாக ரூ. 5 லட்சம் ரூபாய் 12 டிக்கெட்டுகளுக்கு அளிக்கபடுகிறது. 1,81,513 பரிசுகள் வழங்கப்படுகின்றன 4 வது பரிசாக ரூ.1 லட்சம் 54 டிக்கெட்டுகளுக்கு அளிக்கப்படுகிறது. மொத்தம் 1,81,513 பரிசுகள் அளிக்கப்படுகின்றன. இதில் 5 ஆயிரம், 2 ஆயிரம், 500 மற்றும் 250 பரிசுத்தொகையும் அடங்கும். டிக்கெட்டுகள் ஆறு சீரியஸ்களில் கிடைக்கின்றன. BR 108 சம்மர் பம்பர் லாட்டரி என்ற பெயரில் விற்பனையகும் இந்த டிக்கெட்டுகள் SA, SB, SC, SD, SE, SG ஆகிய வரிசைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. டிக்கெட் விலை எவ்வளவு? ஒவ்வொரு டிக்கெட்டின் விலை ரூ. 250 ஆகும். குலுக்கல் மார்ச் மாதம் 28 ஆம் தேதி சனிக்கிழமை மதியம் 2 மணிக்கு திருவனந்தபுரம் லாட்டரி அலுவலகத்தில் நடைபெறும். கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பரில் கோடிகள் கிடைக்கும் என ஆசை ஆசையாய் எதிர்பர்த்து இருந்த பல லட்சம் லாட்டரி பிரியர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது. லாட்டரியின் சிஸ்டமே அப்படித்தான்.