
மும்பை: ஜனவரி 29-
மகாராஷ்டிராவில் ஆளும் மகாயுதி கூட்டணிக்குள் ஏற்கனவே சில கருத்து வேறுபாடுகளும் வார்த்தை மோதல்களும் கடந்த சில மாதங்களாகவே இருந்தன. அதிலும் அங்கு இரு மாதங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடந்த நிலையில், அப்போது கருத்து வேறுபாடுகள் அதிகரித்தன. வெளிப்படையாகவே பாஜகவும் சிவசேனாவும் விமர்சித்துக் கொண்டன. இந்தச் சூழலில் அஜித் பவாரின் மரணம் எதிர்பாராத மரணம் அங்கு பாஜக ஆட்சியை ஆபத்தில் தள்ளி இருக்கிறது. மகாராஷ்டிராவில் பாஜக- ஒருங்கிணைந்த சிவசேனா இடையே பல ஆண்டுகளாகக் கூட்டணி இருந்தது. ஆனால், 2019 தேர்தலுக்குப் பிறகு முதல்வர் யார் என்பதில் குழப்பம் ஏற்படவே இந்தக் கூட்டணி முடிந்தது. இருப்பினும், 2022ல் தாக்கரேவுக்கு எதிராக ஷிண்டே கலகம் செய்து மீண்டும் பாஜகவுடன் கைகோர்க்கவே இந்தக் கூட்டணி மறுமலர்ச்சி பெற்றது. ஓராண்டில் அஜித் பவாரும் சரத் பவாரிடம் இருந்து கட்சியை உடைத்துக் கொண்டு வந்தார்.
தனது ஆட்சிக்குக் கிடைத்த வெற்றிதான் இது என்பதால் தனக்கே முதல்வர் பதவி வேண்டும் என்றார் ஷிண்டே! ஆனால், பாஜக சற்றும் விட்டுக்கொடுக்கவில்லை. இருப்பினும், ஷிண்டேவுக்கும் வாய்ப்பில்லை. இதனால் துணை முதல்வர் பதவியை ஏற்றார். ஷிண்டே துணை முதல்வர் பதவியை ஏற்கவில்லை என்றாலும் கூட அவரை கழற்றிவிட்டுவிட்டு பாஜகவும்- என்சிபியும் ஆட்சியை அமைக்கும் என்பதை உணர்ந்தே ஷிண்டே இந்த முடிவை எடுத்தார்.















